தவில் மேதை N.முவீராச்சாமி

நந்திதேவன் வழிவந்தநற்தவில்
நாயனத்தைஉசுப்பிடும் சொற்தவில்
விந்தைஆயிரம் தாளகதிகளை
விரல் நுனியில் விளைத்திடும் பொற்தவில்
சந்தமார் கவி போலச் சபைகளை
தனித்து இயலயத்தால் மயக்கும் மதுத்தவில்
மந்திரத் தவில் N.முவீரச்சாமி
கரத்திலோ இது இசைச்சரம் ஏவும் வில்!

காரைமண்ணின் கலைஞன்,வயதேழில்
கால் பதித்துக் கடந்தகணம் வரை
வாழும்…. இசையைவழங்கும்,தவில்மேதை!
மாகலைஞரும் மதிக்கும் இசைமணி!
ஈழச்சிதம்பர ஆஸ்தானவித்துவான்!
N.முகணேசனோடு இசைத்த‘கலைச்சுடர்’
யாழ் தவில் மேதையாவரோடும்…தவில்
யாகம் செய்திசைஅமுதம் பொழிந்தவர்.

நிமிர்நடை,கம்பீரச்சிரிப்புஎந்
நிலையிலும் லயம் பிசகாமனம்…ஆழ்ந்த
அமைதி,எளிமை,அணிந்தஉரு.. தந்தை
அடிதொடரும் கலைப்பணி…மாறாத
சமயப் பற்றிவைகொண்ட இசைவாணன்!
தலம் பலதில் இசைத்துஅருள் பெற்றவர்!
சமீபத்தில் ‘கலாபூஷணம்’விருதினை
பெற்றசாதனைஉவந்துமேவாழ்த்துறோம்.

Leave a Reply