அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம் அவர்கள்

அன்னையின் மனம் கொண்டவர்,தந்தையாய்
அன்பைக் கண்டிப்பினூடு அருள்பவர்
மென்மைக்குள்ளேமிடுக்கும் படைத்தவர்.
மேதமையுடன் பணிவும் நிறைந்தவர்.
வென்றஆசான்,மவுனமாய் நிர்வாக
விதிவகுத்துச் சிறந்தவர்…பேரன்பர்
பஞ்சலிங்கப் பெரியோன்! யாழ்,கொக்குவில்
இந்துபோற்றியமேன்மைஅதிபராம்!

நிறைகுடம் எனத் தழும்பாதுநின்றிட்ட
நேர்மையாளனாய்…நீதிநிர்வாகியாய்,
பொறுத்தபோரிடைநடுநிலையாளனாய்,
பொதுசனங்களுக்கோபெருந்தொண்டனாய்,
கறைபடியாக் கரத்துடன் ஓய்வின்பின்
கருணை,திறமை,கலந்து…. அடித்தளம்
சிறார்க்குவடிவமைத்திட்டஅறிஞனாய்
சேவைஆற்றிடும் செம்மல் நீர்…வாழ்கவே!

வாரிமேவி இழுத்ததலைமுடி
மிடுக்குவற்றாநரைத்தஅடர்மீசை
நேர்த்திகசங்காத் தூய உடை…எந்த
நேரமும் புன் சிரிப்புமுகம்…எனக்
கீர்த்திகொண்டும்…நெருங்கிவந்தேகாரை
KIDS parkக்கிற்கும் புதுவழிகாட்டிய
ஆசான் உங்கள் ‘பவளவிழாவில்’எம்
அன்புரைக்கிறோம் வாழ்த்திவணங்குறோம்.

Leave a Reply