சேவை பேராளா வாழி –கே.கணேஷ் அவர்கள்

வருடங்கள் ஐம்பதாக அரச சேவை
வகித்த செம்மல்! தன்னலங்கள் பாரா தெந்த
இரவு பகலும் அயரா துழைத்த வீரர்!
இணையில்லா நிர்வாக நிபுணர்! மெய்யால்
இறைதுணையால், கறைபடியாக் கையால், எந்த
இடரிடையும் முடிவெடுத்து ஜெயித்த வேந்தர்
பெரும்பணியை… தனை அர்ப்பணித்துச் செய்த
பேராளர்! கணேஷ் அவர்கள் வாழி… வாழி!!

யாழ்ப்பாணம் நெருக்கடியின் உச்சம் தொட்ட
யதார்த்தத்தில்…. அரசாங்க அதிப ராகி
மாறிமாறி வந்த சவால் அனைத்தும் தாண்டி
மக்கள் பணி செய்ததையும், அரச சேவை
நேர்மையினை மீட்டெடுத்துச் செம்மை சேர்த்து
நல்லாட்சி புரிந்ததையும், அபிவிருத்திப்
பாதையினை அகலிக்க வைத்து நிற்கும்
பெருமையையும், நன்றியோடு நினைவு கூர்ந்தோம்!

Leave a Reply