நூல் விமர்சனம்: கனவுகளின் எல்லை – க.சிவா

கனவுகளே வாழ்க்கையாகிப்போன தமிழர்களது கனவுகளின் தேசத்தில் இருந்து கனவுகளின் எல்லையைக்காண முற்பட்டிருக்கிறான் கவிஞன் ஒருவன். கவிஞன் த.ஜெயசீலனின் முதலாவது கவிதைத்தொகுதியாக ‘கனவுகளின் எல்லை’ என்ற இந்தக் கவிதை நூல் அமைகிறது.

இவர் எழுதிய கவிதைகளின் தொகுதி முதலாவதாக இருந்தாலும், இவரது கவிதைகள் வானொலிகள் ஊடாகவும், பத்திரிகைகள் ஊடாகவும் கவிதைப் பிரியர்களை நிறையவே களிப்படையச் செய்திருக்கின்றன. இளம் கவிஞர்கள் என்றால் புதுக்கவிதைகள் தான் என்ற நிலையை மாற்றி மரபினைக் கைபிடித்து புதமைகளைப் பாடியிருக்கிறார். இவர். இவரது கவிதைகளில் எதுகை, மோனை, சந்தம் என அனைத்துமே செறிந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்துக் கவிஞன் ஒருவனின் கவிதைகள் என்பதற்குச் சான்றாய் இவரது கவிதைகளில் கந்தகமணம் வீசுவதை உணரமுடிகிறது.நல்ல கவிவளமும், சிறந்த மொழிவளமும் கொண்ட இந்த இளம் கவிஞன் கவிதை உலகிற்கு செய்ய வேண்டிய பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. இவர் நிச்சயம் கவிதை உலகில் இனங்காணப்பட்டு,ஈழத்து கவிதை வரலாற்றில் தன் பெயரையும்; பொறித்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

(14-20 வைகாசி 2002 சுடரொளி கலையமுதம் பக்கத்தில் நூல்விமர்சனம் பகுதியில் இவ் குறிப்புரை இடம்பெற்றது)

Leave a Reply