சோ.பத்மநாதன்

அன்புள்ள ஜெயசீலன்,
‘புத்தாயிரத்துக்கோர் பூபாளம்’ நல்ல கவிதை உலக நன்மையை – ஆன்ம ஈடேற்றத்தை- அவாவும் கவிதை “விண்வெளியை உன்கைவிரலால் அளந்து விடு மண்ணனுப்பு மழையனுப்பு பிறகோளில் செய்விதைப்பு!” அன்பின் அடிமுடியை அளக்கவல்ல செய்மதி பற்றியும் எந்திரத்தின் பற்களுக்கு இதயத்தை விற்றுவிடும் சந்ததி பற்றியும் புதுமையாக எழுதியிருக்கிறீர்கள். வழமைபோல நல்ல வீச்சு, வேகம் நான் குறிப்பிட்ட இடங்கள் வருமாறு :-
விடுதலையை தேடுவோர்க்கு …. (வேட்போர்க்கு….)
புத்தரும் காந்தியும் மட்டும் பூக்கவிதை போட்டுவிடு
சா… தனையும் உவப்பாக்கி சாம் முழுதும் சோலை நெய்யும்”
மனிதத்தை மீட்டெடுப்பாய்!
‘விழுமியங்கள் என்னானால் என்னென்னும்…’
இவை பெரிய நெருடல்கள் அல்ல. நுட்பமாக நோக்குவோர் மனச்செவியில் மட்டும் விழக்கூடிய சுருதி பேதங்கள். மேலே நான் செய்துள்ள மாற்றங்கள் முடிந்த முடிவுகளும் அல்ல ‘பண்புதத்தைமை’ என்னிடம் என்றுமே இருந்ததில்லை! ஆயினும் குற்றியலுகரப் புணர்ச்சியை மட்டும் கவனியுங்கள்.
(உூம்) அணைந்து ூ எடு, மீட்டு ூ எடு, அளந்து ூ எடு
அன்புடன்,
சோ.பத்மநாதன்.