எழுதாத ஒரு கவிதைநூல் ஆக்கத்திற்காக விருது பெற்ற கலைஞர் கவிஞர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்கட்கு மனமுவந்தளிக்கும் வாழ்த்துப்பா

வெண்பா

வெற்றி விருதேந்தும் கவிஞனே ஜெயசீலா
சொற்சுவைசேர் கவிதைகளால் – ஏற்றமிகு
‘எழுதாத ஒரு கவிதை’ நூல்வடித்த பெட்டகமே
ஏகனருளால் என்றும் வாழி.

சரணம்
எடுத்தவொரு கருவதனை தொடுத்துமே நூலதனில்
விடுத்திரு முயற்சி விவேகத்தின் வளர்ச்சி
எடுத்துத்தரு நூல்கள் யாவும் அணிபெற – கை
யெடுத்த வேல் முருகனை வேண்டுகிறேன்.

நல்லறமே மிகக்கொண்டு இல்வாழ்வில்
நல்லவனாம் நாடுபுகழ் வல்லவனாம்
நல்லறிஞர் போற்றும் கவிஞனாம் கலைஞனாம்
பல்வளமும் தாங்கி நின்றான் வாழிநீடு

அண்டு மறிஞர் அல்லாதார் யாவரும் விளங்க
தொண்டாற்றும் உமது பணிகள் தொடர
ஆண்டவன் அருளமுதை வேண்டி மேலும்
ஆண்டுகள் பல கண்டு வாழி நீடு.

நிறைகுடமாம் ஜெயசீலன்
நினைத்துச் செயற்;படவே
இறையருளை தேவி நீ
ஈந்தருள்வாய் காலமெல்லாம்.

கற்கோவளம், வழங்குபவர்,
பருத்தித்துறை. கலாபூசணம் மு.தணிகாசலம்.