அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தெணியான் ஐயா……….

த.ஜெயசீலன்,
20ஃ3 பாரதிவீதி,
சுண்;டுக்குழி,
யாழ்ப்பாணம்,
23.04.2012.

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தெணியான் ஐயா,
அறிவது,
தாங்கள் நேற்றுக் கலந்துரையாடிய விடயம் தொடர்பாக சில விடயங்கள் இத்தால் தெரிவித்துக் கொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். “ மதம்மாற்றம் நிறுத்தப் படவேண்டும் என்றால் மனமாற்றம் ஏற்படவேண்டியது அவசியம்” என நான் பேசியது தவறு என்றீர்கள் நான் யாருக்கு மனமாற்றம் ஏற்படவேண்டும் என்றும் கூறவில்லை. அது மதம் மாறுவோருக்கு மட்டுமல்ல. மதமாற்றத்தின் காரணிகளை ஏற்படுத்துபவர்களுக்காகவும் இருக்க முடியும் என்பது என் கருத்தின் அடிப்படை.
மேலும் வெ.து~;யந்தனின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டிலும் எனது ஒரு கவிதையின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை. என்று கூறியிருந்தீர்கள். அது தங்கள் அபிப்பிராயம், தங்கள் கருத்து அதனை நான் மதிக்கிறேன். எனினும் ஒரு எழுத்தாளனோ, கவிஞனோ, பேச்சாளனோ தனக்கு முன்னுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து கூறுவது இயலாத காரியம் என்பதே யதார்த்தம்.
என் கவிதையின் சில கருத்துக்கள் தங்களால் ஏற்றுக்கொள்ளப் படாதிருப்பதுபோல தங்கள் கதைகளிலுள்ள சில விடயங்கள் என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். என் கருத்துக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நானும் உங்கள் கருத்துக்களும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுமாறு தாங்கள் எனக்கும் கூறுவது பொருத்தமற்றதாகவே இருக்கும் என்பதும் என் தாழ்மையான அபிப்பிராயம். இது படைப்பாளியின் தனித்துவத்தை சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குவதாகவே அமையும் எனக் கருதுகிறேன்.
தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளும் மனப்பாங்கும் பொறுப்புண்வும் படைப்பாளிகளிடம், கலைஇலக்கிய வாதிகளிடமும் இதுவே மேம்பட வேண்டும் என்றும் இன்றைக்கும் என்றைக்குமான தேவை என்பதனையும் கூறிப்பணிகிறேன்.

அன்புரிமையுடன்,
த.ஜெயசீலன்.