‘அரசாணி’- அரங்கேறியகவிதைகளின் அறுவடைத.ஜெயசீலன்.

அணிந்துரை

நீண்டகாலமாகவணிகக் கல்வித்துறையில் ஆசானாகவிளங்கி பலமாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட யாழ்.சம்பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியர் திரு.எ.ம.இரவிகரன் அவர்கள் தன் கற்பித்தற் பணிக்கு சமாந்தரமாகதன் கற்பித்தல் காலத்தின் பல்வேறு நிகழ்வுகளையும் சம்பவங்களையும் வெவ்வேறு நிகழ்வுகளில் கவிதைவடிவில் வெளிப்படுத்திவந்திருக்கிறார். இதில் அனேகமானகவிதைகள் கவியரங்க கவிதைகளாக வெளிவந்திருக்கின்றன. அனேகமாக இவரின் கவிதை வெளிப்பாட்டுக் களம் இவர் கற்பிக்கும் கல்லூரியாக அல்லது கல்விப் புலத்து நிகழ்வுகளாக இருக்கின்றது. அனேகமாக இவரதுகவிதையின் இரசிகர்கள் இவரதுமாணவர்களே. அவர்களைநோக்கிஒருஎள்ளல் தொனியுடன் அங்கதச் சுவையுடன் சமூகஅவலங்களையும் பிரச்சனைகளையும் கல்விசெயற்பாடுகள் பற்றியவிடயங்களையும் இவர் முன்வைத்துவந்துள்ளார். இவ்வாறுகடந்தகாலத்தின் விளைச்சல்களுடைய அறுவடையாக‘அரசாணி’ என்றதொகுதியை வெளியிட்டிருக்கிறார்.

இவருடைய இத்தொகுப்பில் கவியரங்கங்களில் இவர் பாடியகவிதைகளும் வேறுபலதனிக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவருடையகவிதைகள் எளிமையானவை. ஓரளவு நேரடித் தன்மையைக் கொண்டவை. இயல்பான ஒரு ஓசை ஒத்திசைவுடையவை. அதிகசோடனைகள் அலங்கார ஆடம்பரங்கள் அற்றவை. சுட்டுவிரல்களாய்,திசைகாட்டிகளாய்,தீப்பொறிகளாய் வாழ்வின் அவலங்களைச் சுட்டிக் காட்டுபவை. படிப்போரில் சலனமேற்படுத்தி சிந்திக்கத் தூண்டபவை. பதச்சோறுகள் சில,

2006 இல் யாழ்குடாநாட்டில் ஏற்பட்ட அசம்பாவித சூழ்நிலையில் மாணவர்கள் இல்லாமலேயே நடந்த(?) ஆசிரியர் தினத்தைசுட்டுகிறது‘மந்தையில்லாதமேய்ப்பர்களாக’எனும் கவிதை.

2009 இல் வந்த‘விரோதி’வருடத்தைவரவேற்கும் கவிதை

“மண்ணில் நடந்த
படுகொலைகளின் இரத்தக் கறைகள்
கழுவிக் களையப்படவா
மாரிபொழிந்து
வருகின்றாய் ‘விரோதியே’”என்றுபேசுகிறது.

2009 ஆசிரியர் தினக் கவிதையாகபாடப்பட்ட“இங்கோர் விதிசெய்வோம்…’’ என்றகவிதை

“சுமைதாங்கிஆவுரஞ்சி
வீதிவழிசெல்லும் ஒவ்வொருஉயிர்க்கும்
முடிந்தநற்தொண்டு
முன்வாயில் காத்திருக்கும்
அத்தனையும் எம்இனத்தின்
தனித்துவஅடையாளங்கள்!”என்றும்

“ஓ…அந்தஎரிமலைவெடித்துச் சிதறிற்று
ஐம்பதுகிலோமீற்றருக்கு
அள்ளித் தெளித்தது
அக்கினிக் குழம்புகளை…
அந்தஅக்கினிக் குழம்பின்
ஆறியசாம்பலில்
உழுதுபயிரிட்டதில் அமோகவிளைச்சல் இம்முறை
எரிமலைசொன்னது
“எந்தவொருதீமையிலும்
இன்னோர் நன்மையுண்டடு”என்றும் வெவ்வேறுபரிமாணங்களைப் பேசுகிறது.

‘சிரிப்புமருந்து’எனும் கவிதை“சிரிப்பால் உங்களை இரட்சிப்பேன்” என்றும் ‘சிரிப்புச் சிகிச்சை’ ‘சிரிப்புத்தானம்’என்பவற்றைப் பற்றியும் சிந்திக்கிறது.

2010இல் யுத்தத்தின்பின் வன்னியிலிருந்துவந்தமாணவர்களைஆறுதற்படுத்தும் அரங்கக் கவிதை
“இப்போ…
வண்டுகள் பூக்களில்
கண்ணீரைஎடுக்கின்றன
………..
சுடுகாடுகளுக்காகவே
பிணங்கள் தயாரிக்கப்பட்டன”என்றுகலங்கி
“இப்போதுதேவை
நன்மைகளைச் சுரண்டாதநட்பு
இப்போதுதேவை
ஆறுதல் சொல்லஅன்பானவார்த்தை

இங்கேபுதியகலப்பைகளுக்காக
ஒருநிலமும்
இங்கேபுதிய சூரியர்களுக்காக
ஓர் வானமும்
இங்கேபுதியபூக்களுக்காக
ஓர் வனமும்
ஒருயுகமாகக் காத்திருப்பது
உன்னைஎண்ணியல்லவோ…”என்றும் உற்சாகமூட்டுகிறது.

ஓரிருஅடிகளில் எழுதப்பட்டசிலகவிதைகள் மின்மினிகளாகமினுங்குகின்றன.
உ-ம் பதவிஎனும் கவிவரிகள்
“கேளாமல் வந்து
கேள்விமேல் கேள்விகேட்கவைக்கும்”

நுண்கலைஎனும் கவிவரிகள்

“பூவைச் சட்டையில் குத்த
முள்ளையேகுண்டூசியாக்கும் திறன்”என்றும் இயம்புகின்றன.

இவற்றைவிட

‘கணிப்பீட்டுக் குறள்’..கணிப்பிட்டின் சூட்சுமங்கள் பற்றியும்,‘உயிர்காக்கும் உத்தமர்க்கு’குருதிக் கொடையாளர் தினம் பற்றியும்,‘ஊரடங்குநேரவாழ்க்கை’ ஊரடங்குநேரம் தவிர்ந்தகுறுகியமீதிநேரத்தில் நாம் வாழ்ந்தவாழ்வுபற்றியும் சொல்லிச் செல்கிறது.

வண ஜெறோசெல்வநாயகம் அடிகளாரின் குருத்துவ வெள்ளிவிழா நிகழ்வில் அரங்கேறியகவிதை‘கரம்பொன்னின் பொற்கரம்’

“அருட் தந்தையே
நீங்கள் பிறந்தமண் கரம்பொன் என்பதாலா
உங்கள் கரங்களும் பொன்னாச்;சு” என்றுவியக்கிறது.

இந்நூலின் தலைப்பான‘அரசாணி’என்றகவிதையாழ்ப்பாணத்தில் அண்மையில் முள்முருக்குமரத்தில் ஏற்பட்ட நோயை குறியீடாகக் காட்டி அண்மைக் காலத்தில் எம்மண்ணில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்துக்களை ஒப்பீடுசெய்கிறது.

“என் அரசாணி இலை
காய்ந்துவிழுமுன்னே
முதல்நாள் முதலிரவில்
உங்கள் வாழ்வுஉதிரவும் கண்டேன்”என்றவலியைப் பகிர்கிறது.

‘வு’பற்றியகவிதை,‘பத்திரிகை’,‘வெண்கட்டி’ என்பனபுதுப்பதிவுகளாகமிளிர்கின்றன. இன்ரக்ட் மரம் நாட்டு விழா,HNB வங்கிபற்றியகவிதைஎன்பனஅந்தந்தநிகழ்வுகளைபிரதிபலிக்கின்றன.

திரு.V.K.இரவிகரனுடையமுழுநேரத் தொழில் ஆசிரியசேவை. ஆனால் கவிதைத் துறையில் உள்ள ஈடுபாடு அவரையும் ஒரு கவிஞராக மாற்றுவதற்குரிய ஆரம்பத்தை தந்திருக்கிறது. இதில் கணிசமான வெற்றியை இவர் பெற்றிருப்பதை இக்கவிதைகள் எடுத்துக் காட்டுகின்றன.

எனினும்,கவிதை பற்றிய முழுமையான ஈடுபாடும் பல்வேறு கவிதைகளுடனான பரீச்சயமும் தொடர்ச்சியான கவிதை வாசிப்பும் தேடலும் கவிதையுடனான நெருங்கிய அனுபவமும் ஊடாடுகையும் திரு.எ.ம.இரவிகரனின் கவியாற்றலைமேலும் மெருகேற்றிமேம்படுத்தும் என்றால் மிகையில்லை.

Leave a Reply