அன்பின் நண்பன் த.ஜெயசீலன்,
அவர்கட்கு,
“கனவுகளின் எல்லை” என்ற கவிதைத் தொகுதி கிடைக்கப்பெற்றது. ‘ப்ரவாகம்’ எட்டாவது இதழில் தாங்களின் கவிதையின் கீழ் சிறு விளம்பரமாக நூல் விபரத்தை வெளியீட்டுள்ளேன். இனிவரும் இதழ்களில் உங்களின் புத்தகத்துக்கான விமர்சனத்தை விரிவாக எழுதி பிரசுரிக்க நினைத்துள்ளேன். தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் பிரதேசத்தில் எமது சஞ்சிகைக்கான வாசகர்களை பெற்றுத்தர இயலுமா. தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின் தங்குதடையின்றி ப்ரவாகம் வெளிவருவதற்கு உதவியாக இருக்கும்.
புதில் கண்டு தொடரும் வரை

நட்புடன்,
உக்குவளை அக்ரம்.