வாழ்த்துரை

கிளிநொச்சி மாவட்டத்தில் தனித்துவ வரலாறு கொண்ட பிரதேசமாக புகழ் பூத்து விளங்குகின்ற பச்சிலைப்பள்ளியானது காடும், வயலும், கடலும் இணையப் பெற்றதாகும். முல்லையும், மருதமும், நெய்தலும் சார்ந்த பண்பாடுகளே இம் மக்களின் வாழ்வியல் கோலங்களாகும்.
இம் மண்ணில் கல்வி,பொருளாதாரம்,சமூகம்,பண்பாடு போன்றவற்றினை மேம்படுத்தும் ஒரு முக்கிய தலமாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் புலோப்பளை பொதுநூலகம் விளங்குகின்றது. ‘நூல் பல கல்’என்பது ஒளவையின்அமுத மொழி.ஒருவன் ஙண்ணறிவு ஆற்றலும் பெற அவன் நூல்களைக் கற்றுத் தேறல் அவசியம்;.அதற்கு கல்வி நிலையங்களுக்கு அடுத்த படியாக நூல் நிலையங்களே துணை புரிகின்றன.நூல்களை தொகுத்து வைத்திருக்கும் ஆலயம்,அறிவுக் களஞ்சியம் நூலகம் என்றால் அது மிகையாகாது.
கிபி 4ஆம் நூற்hண்டிலேயே நூல் நிலையங்கள் தோன்றிவிட்டன என்பர் வரலாற்று ஆசிரியர். எனினும் தற்போதைய தகவல் தொழில்ஙட்ப யுகத்தில் சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தில் நூலகங்களின் பயன்பாடு நலிவடைந்து வரும் துப்பாக்கிய நிலை காணப்படுகின்ற சூழலில் புலோப்பளை நூலகத்தினால் ‘பச்சிலை’ சஞ்சிகையின் எட்டு இதழ்கள் சிறப்பாக வெளியிடப்பட்டு ஒன்பதாவது இதழ்; தற்போது வெளியிடப்படுவதை இட்டு பெருமை கொள்கிறேன்.
இவ் இதழை வெளியி;டும்; மலர்க்குழுவினருக்கும் அவர்களுடன் இணைந்து இதழ் வெளியீட்டில் சிறப்புடன் பணிபுரிவோர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்தும் வாழ்த்திப் பணிகின்றேன்

இ.த.ஜெயசீலன்,
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
பச்சிலைப்பள்ளி.