ஈழத்து இலக்கியத்துறை மற்றும் ஆசிரியத் துறைகளில் நீண்ட காலமாக செயற்பட்டு இடையறாது இயங்கிவரும் சமரபாகு சீனா உதயகுமார் சினிமா இசைத் துறையின் தீவிர இரசிகரும் கூட. தான் கண்டு இரசித்த பழைய இடைக்கால பாடல்கள் தொடர்பாக ‘பாடல்களால் பேசுகிறேன்’ எனும் இந்த நூலை வெளியிடுகிறார்.
ஏற்கனவே கவிதை,சிறுகதை,நாவல் உட்பட வெளிவந்த நூல்களில் மேலும் ஒன்றாக ஆனால் சற்று வித்தியாசமான நூலாக ‘பாடல்களால் பேசுகின்றேனும்’ வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.
இவர் தனது இரசனை சார்ந்து பாடல்களைத் தேர்ந்து ஆழமாக இரசித்து விமர்சித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.அவர் இரசித்த அனேக பழைய, இடைக்கால பாடல்கள் அவரின் தலைமுறையினரான எமதும் விருப்பத் தெரிவுகளாக இருப்பதால்; நாமும் இக்கட்டுரைகள் குறிப்புக்களுடன் மூழ்கி அவற்றின் தாற்ப்பரியத்தை உணர்ந்து புரிந்து அவரின் இரசனையுடனும் பங்குகொள்ள முடிகிறது.
இந்த நூற்றாண்டின் இணையற்ற இசைமேதை இசைஞானி இளையராஐhவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இந் நூல் பாடலாசிரியரகள்;, இசையமைப்பாள்கள்,பாடகர்களின் தனித்துவங்கள்,சிறப்புகள்,மேன்மைகள்,மேதமைகள் என்பவற்றை நுணுக்கமாக சொல்லிச் செல்வது பாராட்டுக்குரியது.
சமரபாகு சீனா உதயகுமாரின் ஏனைய நூல்களில் இருந்து சற்று வேறுபட்டு தனித்துவம் மிக்கதாக விளங்கும் இந் நூல் சகலராலும் விரும்பி வாசித்து இரசிக்கப்படும் என்றால் மிகையாகாது.