கிளிநொச்சி மாவட்டத்தின் பூர்வீக வரலாறு கொண்ட பிரதேசமாக புகழ் பூத்து விளங்குகின்ற பச்சிலைப்பள்ளிளயானது காடும்,வயலும்,கடலும் இணையப் பெற்றதாகும்.முல்லையும் மருதமும் நெய்தலும் சார்ந்த பண்பாடுகளே இம் மக்களின் வாழ்வியல் கோலமாகும்.
இம் மண்ணில் கல்வி,பொருளாதாரம்,சமூகம், பண்பாடு போன்றவற்றினை மேம்படுத்தும் பொருட்டு தன்னார்வ அமைப்பாக பச்சிலைப்பள்ளி கல்வி விருத்தி அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது.
தசாப்தங்களாக தொடர்ந்த யுத்தத்தால் வாழ்வின் பல பக்கங்களையும்,எம் மண்ணின் அடையாளங்கள்,தகவல்கள் பலதையும் தொலைத்து நிற்கிறோம்;. நித்தமும் யுத்தம் கண்டு நிர்க்கதியின்றி நிலை குலைந்தாலும் யுத்தத்தின் பின்னாக தற்போதைய காலத்தில்; மீண்டும் விதை பல போட்டு விருட்சங்க;டாக பசுமையும் மிடுக்கும் காண விளைகின்றது பச்சிலைப்பள்ளி பிரதேசம.;இதற்கு அரச உதவிகளுக்கு சமாந்தரமாக தன்னார்வம் கொண்ட அமைப்புக்களின் பங்களிப்புக்களும் இன்றியமையாதது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான கற்றல் அதன் வழி நிற்றல் கடன் திட்டம்,பல்கலைக்கழக புகுதிறன் உற்சாகப்படுத்தல் திட்டம்,கா.பொ.த கற்கை ஊக்குவிப்பு கருத்திட்டம்,தேசிய சாதனையாளர் பாராட்டு திட்டம்,கற்றலுக்கான வாழ்வாதாரம் எனப் பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுத்து வரும் பச்சிலைப்பள்ளி கல்வி விருத்தி அறக்கட்டளை இன்னுமோர் படி மேலே சென்று இப் பிரதேசத்தின் முக்கியமான ஆளுமைகளாக உள்ளவர்களை இனங்கண்டு;. அவர்களது சேவையை பாராட்டுவதற்கும்,கௌரவிப்பதற்கும் முயற்சித்து நிற்பது வரவேற்கத்தக்கது.
இவ் அரிய சமூக பணிகளை முன்னெடுத்து செல்லும் “பச்சிலைப்பள்ளி கல்வி விருத்தி அறக்கட்டளை” நிர்வாகத்தினர் மற்றும் அவர்களுடன் இணைந்து நூல் வெளியீட்டில் சிறப்புடன் பணிபுரிவோர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரக்கக் குணத்தோடும் தன்னலங்கள் இன்றியும் இல்லார்க்கு கொடுத்துதவியும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் தொடரும் பணிகளே பண்புடைய உயரிய பேரின்பத் தொண்டுகளாகும்.இப்பணிகளை செய்திடும்; அறக்கட்டளையினரை வாழ்த்திப் பணிகின்றேன்.
இ.த.ஜெயசீலன்,
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
பச்சிலைப்பள்ளி.