திரு அருமைத்துரை அருளானந்தசோதி அவர்கள் மணிவிழா வாழ்த்துச் செய்தி

மதிப்புக்குரிய திரு அருமைத்துரை அருளானந்தசோதி அவர்கள் மணிவிழா காண்பதையிட்டு அவரை வாழ்த்தி மகிழ்கின்றேன்.1964 ஆம் ஆண்டு பிறந்து தனது கல்வியை சிறப்பாக கற்று முடித்து 1988 ஆம் ஆண்டு அஞ்சல் அலுவலகத்தில் தனது அரச சேவையினை ஆரம்பித்தார்.இவர் தனது 36 வருட சேவைக்காலத்தில் மக்களுக்கான அரச சேவையை திறம்பட ஆற்றியுள்ளார்.திரு அருளானந்தசோதி அவர்கள் இலக்கியத்துறையிலும்; விளையாட்டத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். தனது பள்ளிப் பருவத்தில் “சிறுகதை பரிசு” எனும் சிறுகதைக்காக முதல் பரிசு பெற்றமையும்; ஸ்ரீலங்கா உதைப்பந்தாட்ட சம்மேளனத்து;டனான இவரது உறவு 25 வருடங்களுக்கு மேலாக இருப்பதும் இவற்றிக்கு சான்றுகளாகும்.
போராட்டச் சூழலைக் கடந்து வந்த அனுபவச் செழிப்பு அவருக்குள் நிறைந்து கிடைக்கிறது. அவர் 1983 தொடக்கம் 1987 வரையான காபலப்பகுதியில் இரு முறை சிறைக்கு சென்று வந்தமை அவரின் இன்னொரு தளச் செயற்பாட்டை எடுத்துரைக்கிறது.
மணிவிழா நாயகன் அவர்கள் மனிதாபிமான பணிகளையும் எமது இனத்தின் அடையாளமான தமிழையும் எமது தாயகமான தமிழ் மண்ணையும் நேசித்து பெருமளவு சமூகப் பணிகளை செய்து தற்போது “அன்பே சிவம்” அறக்கட்டளையின்; இலங்கைக்கான தலைவராக 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை செயற்பட்டு வருகின்றமையை வாழ்த்தவதோடு அவருடைய பணிகள் மென்மேலும் தொடரவும் அவரின் மணிவிழா சிறப்புறவும் எல்லாம் வல்ல இறையருள் வேண்டி பணிகிறேன்.

இ.த.ஜெயசீலன்,
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
பச்சிலைப்பள்ளி.