ஊடகவியளாளர் திரு கணபதி சரவானந்தா அவர்களின் ஊக்கமளித்தல் என்ற நூல் கடுகளவானது.ஆனால் அதன் காரம் அளவில் பல மடங்காக இருக்கிறது. தன்னுடைய சுய அனுபவத்தையும் தான் கண்ட பலதரப்பட்ட, வாழ்வில் வெற்றி கண்டவர்களின் அனுபவங்களையும் அடிப்படையாக கொண்டு கற்றுக்கொண்ட பாடங்களை மாணவர்களுக்கும், இளைய தலைறையினருக்கும், அன்றி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அனைவருக்கும் ஒரு உசாத்துணை நூலாக இந்த „ஊக்கமளித்தல்‟ நூலை தந்துள்ளார்..
ஊடகவியளாளராக தன்னை அடையாளப்படுத்தி வரும் திரு.கணபதி சர்வானந்தா அவர்கள் தான் ஒரு படைப்பாளி என்பதையும் இச் சிறு நூலின் ஊடாக வெளிப்படுத்தி இருக்கிறார்.அதற்கு பத்திரிகைத் துறையிலும் சஞ்சிகை வெளியீடுகளிலும் அவர் கொண்டிருக்கும் அனுபவம் அவருக்கு கைகொடுத்து உதவி இருக்கிறது.
“நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தத் தவறும் பட்சத்தில்,இந்த உலகம் உங்கள் பங்களிப்பை இழந்து விடுகிறது.அதன் காரணமாக உலகத்தின் முன்னேற்றம் ஒருபடி குறைந்து கூடப் போகலாம்.”என்றும்,
“உங்களை நீங்கள் வெளிப்;படுது;துவதற்கு உதவியாக முதலில் உங்களுக்கள் உள்ள நல்ல விடயங்களை நீங்களே தேடி இனங்கண்டு கொள்ளுங்கள்.உங்களிடம் உள்ள திறமை என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்.”என்றும்,
“நீங்கள் உங்களை வெளிப்படுத்தாதவரைக்கும் நீங்கள் பிறருக்குக கொடுப்பதற்கும்; அவர்களிடமிருந்து பெறுவதற்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பை,சந்தர்ப்பங்களை நீங்கள் இழந்த விடுகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.”என்றும்
“உங்களை நீங்கள் வெளிப்படுத்த சுற்றி எத்தனையோ சந்தர்ப்பங்கள் குவிந்த கிடக்கின்றன.ஆனால் நீங்கள் தான் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.உங்களை நீங்கள் வெளிப்படுத்தாத வரைக்கும் நீங்கள் யார் என்று உலகத்துக்குத் தெரியப்போவதில்லை.அப்படித் தெரியாதவரைக்கும் உங்களால் உச்சத்தை தொடமுடியாது”என்றும்
“உங்களை வெளிப்படுத்துவது பிறராக இருக்கட்டும்.அவர் உங்களுக்கு எவ்வளவு தூரம் அறிந்தவராக இருந்தாலும் அவரால் உங்களை நீங்களாகச் சொல்ல முடியாது ”என்றும்
“சரியான இடந்தான் உனது அந்தஸ்த்தைச் சரியாக மதிப்பிடும் “என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.”பிழையான இடத்தில் நீசென்று உன்னை நிறுத்திவிட்டு, உன்னை அவர்கள் சரியாக மதிக்கவில்லை என்று கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்”என்றும்
“நல்லனவற்றை எண்ணுவதையும்,சிந்திப்பதையும்,தேடுவதையும் உங்கள் நடவடிக்கைகளுள் ஒன்றாக்கிக் கொள்ளுங்கள்.விளையாட்டு வீரர் மேற்கொள்ளும் பயிற்சி போன்று அவற்றை அன்றாடாப் பயிற்சியாக்கிக் கொள்ளுங்கள்” என்றும் தனது அனுபவங்களை கூறி இருப்பது மனம் கொள்ளத்தக்கது.
முதல் முயற்சி சிறிய முயற்சியாயினும் அது இந்த சமூகத்துக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் “எனக்குள் ஆயிரம் கனவுகள் ஒளிந்து கிடக்கின்றன அக்கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பதே எனது அவா”என்று இவர் கூறிச் செல்வது பாராட்டுக்குரியது.
இன்று இளைஞர்களை, சமூகத்தில் தேவைநாடி நிற்பவர்களை தம் வாழ்வில் nஐயிக்க வேண்டும் என்று இடையறாது முயல்பவர்களை, ஊக்கப்படுத்துபவர்கள் அருகி வருகின்ற இக்காலத்தில் ஒரு தூண்டுதல் முயற்சியாக இந்நூல் வெளியிடப்பட்டமைக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு இப்பணி தொடர வாழ்த்துகிறேன்.