ஆற்றா அழுகை

வானம் அழுவதனை வழமையாக்கிற் றொவ்வொராண்டும்!
“தோன்றும் வெளிப்பின்றோ” டென்று
உரைத்தவாயே…
நீளும் இது ‘பதினெட்டு’ வரை
எனச் சொல்ல…
வானம் அழுகிறது இன்றும்!
பலசமயம்
ஓலமிட்டும், ஒப்பாரி வைத்தும்,
சிலநேரம்
ஓய்ந்தும், விசும்புமது ஊர் முழுதும்!
அன்றைக்கும்
வானம் அழுதது அழிவைமாற்ற வழிகளன்றி!
வானம் இன்றழுகிறதோ அன்றழிவை நினைத்தபடி?
ஏதோ இயற்கை அனர்த்தம்,
வெள்ள அபாயம்,
ஏனோ நிலச்சரிவு,
எதிர்பாரா இழப்புகள்,
கோர விபத்து, எங்கோ இரயில் தடம்புரள்வு,
என்று…
‘மே’ மாதம் தொடங்கினாலே
எண்திசையும்
துன்பம் துயரங்கள் தொடர்கிறது!
இயற்கையை
அன்றுமுதல் இன்றும் அழவைக்கு தவ் அழிவு
இன்றும் அழுகிறது இதயத்துள் நம் நனவு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.