சிதைவுகள்

யுத்தம் குதற உயிரிழந்து சிதைந்தவைகள்
சத்தியமும் மெய்யும் தருமமும் மட்டுமல்ல..,
திசைகள் சிதைந்தன,
திக்குகள் சிதைந்தன,
அசையாத சொத்துக்கள் அசையும் சொத்தோடு
ஊர்கள் சிதைந்தன,
உறவுகள் சிதைந்தன,
வேர்கள் சிதைந்தன,
விருட்சங்கள் சிதைந்தன,
காடுகள் சிதைந்தன,
களனிகள் சிதைந்தன,
மேடு மலை சிதைந்தன,
வீடுகள் சிதைந்தன,
கடலோடு கரையோடு காற்றும் சிதைந்தன,
உடல்கள் சிதைந்தன,
உறவுகள் சிதைந்தன,
உயிர்கள் சிதைந்தன,
உயில்கள் சிதைந்தன,
கல்வி சிதைய கலைகள் சிதைந்தன,
எல்லைகள் சிதைந்தன,
எழில்கள் சிதைந்தன,
வளங்கள் சிதைந்தன,
வாய்ப்புகள் சிதைந்தன,
உழைப்பும் சிதைந்தன,
ஓரளவு…ஏனையவை
ஒட்டவைக்கப் பட்டாலும்…
உளத்தின் சிதைவுகளை
ஒட்டவைத்தல் பெரும்பாடு!
ஒட்டாமல் இருப்பதற்கு
திட்டமிட்டு அந்நியங்கள்
செய்வினைகள் செய்திருக்கு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.