‘நான் காற்று நீ கவிதை’ அணிந்துரை

‘காரிகைகற்றுக் கவிதைபடைப்பதிலும் பேரிகைதட்டிப் பிழைப்பதுமேல்’என்பார்கள். ஏனெனில் கவிதைகற்றுஅறிந்துவரக்கூடியஒன்றல்ல. அதுதானாய்த் தோன்றுவது, இயலபாய் வருவது,அதுவாய்ச் சுரப்பது. கவிதைஒருதவம். அது இதயத்தின்,உணர்ச்சிகளின் ஊர்வலம். வெறும் மூளையின்அறிவால் மட்டும் அளந்தறியமுடியாதஅதிசயம். கவிதைஎன்பதுவாழ்வின்,வாழுபவற்றின்,வரலாற்றின் இன்றியமையாத குறுக்குவெட்டுமுகம். அதனைஉணர்ந்துதெளிவதுகடவுளைஉணர்ந்துதெளிவதற்குச் சமம்.
இவ்வாறாகக் கவிதை பரந்துவிரிந்து கிடந்தாலும் கவிதை தொடர்பான அனுபவத்தை, கவிதையுடனான பரீச்சயத்தை, ஏதோ ஒருசந்தர்ப்பத்திலேனும் உயிருள்ள அனைவருமே பெற்றிருப்பர் என்பதுதிண்ணம். இன்றுகவிதையோடுபுழங்குபவர்கள்,கவிதையை இரசிப்பவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்க ளேஎன சில அறிவுஜீவிகள் திருவாய் மலர்கிறார்கள். ஆனால் உயிர்ப் பிறவிஎடுத்துவாழும் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிதை அனுபவத்தை,கவிதைமனநிலையைப்,பெற்றே இருப்பார்கள். ஆனால்அதுதான் கவிதைஅனுபவம்,கவிதைமனநிலைஎன்பதுபலருக்குதெரியாமலேபோயிருக்கும்.
இந்தஅடிப்படையில் கவிதைபுனைவது,கவிதைஎழுதுவது, என்பவற்றைத் தாண்டிகவிதை அனுபவத்தை எல்லோரும் அறிய, பகிர, எல்லோருக்கும் அறிவிக்க எடுக்கும் முயற்சி மிகமிக முக்கியமானது எனக்கருத வேண்டியுள்ளது. அதாவதுதாங்கள் வாழ்வில் எப்போதாவதுஉணர்ந்துகொண்டது,கொள்வது,கொள்ள இருப்பது,கவிதைஉணர்வுதான் எனஎல்லோருக்கும்உணர்த்த,கவிதையைபயிலபயிற்றவேண்டியதுஅவசியமாகின்றது.
அண்மையில் தெல்லிப்பழைப் பிரதேசசெயலகம் கவிதைதொடர்பானபயிலரங்குஒன்றைஏற்பாடுசெய்திருந்தது. அதில் கவிதையின் பல்வேறுபரிமாணங்கள், கூறுகள்பற்றிப்பலரால் பயன்மிக்ககருத்துரைகள் வழங்கப்பட்டன. நானும்ஒருவளவாளனாககவிதையின் ஒரு கூறுபற்றிஎனதுஅனுபவங்களைப் பகிர்ந்திருந்தேன். இந்தப் பயிலரங்கில் மிக இளையோரில் இருந்துமிக மூத்தவர்கள் வரைபல்வேறுதரப்பினர் ஆண்கள் பெண்கள் எனவேறுபாடின்றிக்கலந்துகொண்டிருந்தனர். அனேகமாகஎல்லோரும் கருத்துரைகளைஆர்வத்தோடுசெவிமடுத்தனர். பலர் தயக்கம் விட்டுசந்தேகங்களைதாமாய்க் கேட்டுத்தெரிந்தும் கொண்டனர். பலர் ஆரோக்கியமானவிவாதங்களிலும் அதுதொடர்பானபின்னூட்டல்களிலும் பங்குகொண்டனர். மூன்றுநாட்களாகநடந்தபயிலரங்கின் இறுதிநாளில் நான் மீண்டும் கலந்துகொண்டபோதுஅனேகமாகஎல்லோருமேமிகமிகநிறைவானமனநிலையோடுதாம் கவிதைபற்றியபலஅடிப்படைகளைப் புரிந்துகொண்டதாகக் கூறினர். தாம் கவிதைகளைஎழுதிப் பார்க்கஆர்வமாகஆவலாக இருக்கிறோம் என்றனர்.
இதுஒருமுதற்படிதான் எனநிறைவுரையில் கூறியநான் கவிதைஅனுபவம் என்பதுஒருநெடும்பயணம்,“பயில்தொறும் நூல்நயம்”என்பதுபோல் கவிதைபயிலப் பயிலச் செம்மையுறும் என்றும்,தொடர்ச்சியான, இடையறாதகவிதைதொடர்பானபரீச்சயம்,கவிதைபற்றியதேடல் மேலும் மேலும் உங்களைமேம்படுத்தும் என்றும் சொன்னேன்.
மேலும்நான் இக்கணம் வரைகவிதையின் மாணவன்தான். இன்றும் கவிதையைப்பயில்கிறேன்.கவிதையைவியக்கிறேன். இன்றும் அறிந்துணராதகவிதையின் பக்கங்களை கூறுகளைத் தேடிஅறியும் ஆவலுடனேயேஎன் கவிப் பயணத்தைமேற்கொள்கிறேன் என்றும் தெரிவித்தேன்.
மேற்படிகவிதைப் பயிலரங்குதொடர்பாகபயிலரங்கின் இறுதியில் பங்குகொண்டோர் எழுதியகவிதைகளைநூலுருவாக்குவதுஎனப் பிரதேசசெயலாளர்ஒருஅறிவிப்பையும் வெளியிட்டுபயிலுனர்களைஉற்சாகமூட்டினார்.அதுவே‘நீகாற்றுநான் கவிதை’என்றஇந்தக் கவிதைநூலாக,தெல்லிப்பழைப் பிரதேசசெயலகவெளியீடாக,வெளிவருகிறது. அனேகமாகபலரின் கன்னிக் கவிதைகள் இந்நூலில் அச்சேறி இருக்கின்றன.
இந்நூலிலுள்ளகவிதைகள் தொடர்பாகபலருக்குபல்வேறுஅபிப்பிராயங்கள் ஏற்படலாம். “இவையெல்லாம் கவிதைகள் தானா?”எனசிலமெத்தப்படித்தமேதாவிகள்,கவிதைக் கடலைத் தாம் நீந்திக் கடந்தவர்கள் எனநினைத்துக் கொண்டிருப்போர்,நையாண்டியும் செய்யலாம். என்னைப் பொறுத்தவரைகவிதைப் பயிலரங்குமுதலாம் படியென்றால் இந்நூல் இரண்டாம் படிமட்டுமே. இதனை இருநூறாம் படிஎன்றுகருதிவிமர்சித்தல் அபத்தமானது. இதில் பலஆரம்பகட்டகவிதைகள் உள்ளனஎன்பதுமறுப்பதற்கில்லை. எந்தமேதையும் முதலில் ‘அரிவரி’பயின்றுதான்காலப்போக்கில் அறிவாளியாகிறான் என்பதுபோல இதனையும் எடுத்துக்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதில் எழுதியுள்ளபலர் காலப் போக்கில்தம்மைசிறந்தகவிஞர்களாகவளர்த்துக் கொள்ளவும் கூடும். அதுஅவரவரின் அனுபவம்,முயற்சி,தேடல்,வாய்ப்புஎன்பவற்றால்மேம்படலாம்.
இந்நூலின்பல இடங்களில் கவிதைக்கானநல்லதொடக்கங்கள் இடம்பெற்றிருப்பதைநாம் அவதானிக்கலாம்.


“வலிதந்தவாழ்விது
வலிவடக்கில்லாதது.
எலிக்கும் ஒருவளையுண்டு.
எம்மவர்க்குஏதுண்டு?” (தேவராசாவிக்னேஸ்வரன்)

“பழகியவர்கள் பிரிந்துசெல்லும் போது
கூட வலிக்கவில்லை–ஆனால்
அவர்கள் பழக்கமில்லாதவர்கள் போல
நடக்கும் போதுதான்…
வலிக்கிறது”(தாமினிதர்மினி)

“நான் பிறக்கின்றபோது
கவிதைஎழுதவில்லை- ஆனால்
பிறக்கின்றபோதுகவிதை
சொல்லிக்கொண்டுதான் பிறந்தேன்
…அம்மாஎன்று”

“எம் அன்னையே!தெய்வத்திலும்
மேலாகஉன்னைப் போற்றுகிறோம்.
ஏன் தெரியுமா? தெய்வம்
கருவiறையிற்தான் இருக்கும்
நான் உன் கருவறையிலிருந்துவந்ததால்”(சதாசிவம் லக்சிகா)

“இந்தியாவின்
‘சந்திராயன்’
விண்ணோக்கிப் போகும்போது
தவறிவீழ்ந்த
குழந்தையொன்றாய்
எண்ணத் தோன்றும்
உருவம்…”(சுவேதிகாசுதாகரன்)

“காற்றேஎன் உயிர் உன்னை
விட்டுப் பிரியும் வரைநேசிப்பேன்
ஏனெனில்
என் உயிரற்றஉடலுக்;கு
உயிர் கொடுப்பவள் நீயே” ( )

இவைபதச்சோறுகள்.
இதில் எழுதியுள்ளகவிஞர்கள் தம்மைமேலும் நெறிப்படுத்திபரந்துபட்டதமிழின்,உலகத்தின்,கவிதைகளைகவிதைநுட்பங்களைப்பயின்றுபழகி,தம்மைகவிஞர்களாகமாற்றிக்கொள்ளமுயலவேண்டும்.புதுமையும் நவீனமும்,புதியசிந்தனையும்,விரிந்தகற்பனைவளமும்,எம் மரபின்விழுமியங்களைஅடையாளங்களைத் தனித்துவங்களைஉள்வாங்கும் தன்மையும்,முக்கியமானவை. இயல்பானஆற்றலும் ஆர்வமும் இருப்பவர்கள் கூட தொடர்ந்துபயிற்சிகளைமேற்கொள்வதுசிறந்தது. அதன் தொடர்ச்சியாகதமிழ்க் கவிதைக்குகுறிப்பாகஈழத் தமிழ்க் கவிதைக்குபங்களிப்புச் செய்யக் கூடியவர்களாக இவர்களில் சிலரேனும் மாறவேண்டும் எனவாழ்த்துகிறேன்.

இம் முயற்சிகளுக்குஉறுதுணையும் உற்சாகமும் வழங்கியகவிதை இரசிகன்,கவிதை நேசன்,தெல்லிப்பழைப் பிரதேசசெயலர் க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கும் கலாசாரஉத்தியோகத்தர் திருமதி.செ.தாட்சாயணிஅவர்களுக்கும் எனதுபாராட்டுக்கள்.

இவ்வாறானநல்லமுயற்சிகள் இடையறாதுதொடரவேண்டும் என்பதுஎன் அன்பானவேண்டுகோள்.

22.10.2015.