நூல் புதிது – கைக்குள் சிக்காத காற்று – உச்சிக்கிழான்

ஈழத்தின் இளங்கவிஞர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் த.ஜெயசீலன். அவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாக ~கைக்குள் சிக்காத காற்று| வெளிவந்திருக்கின்றது. (முதலாவது தொகுதி ~கனவுகளின் எல்லை|) ஓவியர் ரமணியின் அழகிய அட்டைப்படத்துடன் 84 கவிதைகளைத் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது.

தன் கவிதை வெளிப்பாடு பற்றி தெளிவான சித்தாந்தத்தை முன்னுரையிலும் ~பாச – கயிறு| (பக் – 96) கவிதையிலும்இ வேறுசில கவிதைகளிலும் பதிவு செய்திருக்கின்றார். கவிதைகள் அனைத்தும் இருண்மையைப் புறந்தள்ளிஇ எளிமையோடு அமைந்திருக்கும் அதேவேளை; நுட்பமான விடயங்களையும் தம்மகத்தே கொண்டுள்ளன. சில கவிதைகளில்இ இறையியற் கூறுகளைப் பின்புலமாகக் கொண்டு வாழ்வியற் போராட்டங்களை வடித்திருக்கிறார்.

த.ஜெயசீலனின் ~அந்தப்புரச் சொற்கள்| (தேவதைஇ ஞானஇ கம்பீரம்.. போன்ற சில) இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. சில கவிதைகள் புதுக்கவிதைகள் போலப் பார்வைக்குட்பட்டாலும் மரபுக்கவிதைகளே!

ஏகலைவன் – (பங்குனி – சித்திரை 2004)