‘கனவுகளின் எல்லை” க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் – பெ.ஐங்கரன்

3.பெ.ஐங்கரன்,
புலோலி தெற்கு,
புலோலி.

அண்ணன் ஜெயசீலன் அவர்களுக்கு,

முதலில் தங்களுக்கு வாழ்த்துக்கள்,
‘கனவுகளின் எல்லை” க்கு பரிசு பெற்றமைக்கு.

தங்களின் கவிதைகளை ஞானம், ஏகலைவன், வெளிச்சம் போன்ற இதழ்களில் தவறாமல் வாசிப்பவன் நான். ‘கைக்குள் சிக்காத காற்று” கு.றஜீபன் அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்று வாசித்து மகிழ்ந்தேன். உண்மையிலேயே பல கவிதைகள் என் உள்ளத்தைத் தொட்டிருக்கின்றன. உங்கள் கவிதை நடையில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவே நான் உணருகின்றேன். ஆக, உங்கள் கவிதையின் வாசகன் என்பதை மட்டும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

தங்களின் ‘கனவுகளின் எல்லை” என்னிடத்தில் இல்லை. உங்களிடத்தில் இருக்குமானால் அனுப்பி வையுங்கள்.

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை,

அன்புத் தம்பி,
பெ.ஐங்கரன்