சிற்பி.சிவசரவணபவன் இன் கடிதம்

6.கந்தரோடை,
சுன்னாகம்,
14.12.2001.

‘கனவுகளின் எல்லை’ – சிறந்த பல கவிதைகளைக் கொண்டது. ஜெயசீலனின் கவிதைகள் நன்றாகவே இருக்கின்றன. ஒரு தடவை எல்லாவற்றையும் வாசித்துவிட்டேன். ‘நவில் தொறும் நூல் நயம்” என்பதற்கிணங்க, கவிதைகளின் சிறப்பை, மற்றையோர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டுமாயின், இன்னும் இரண்டொரு தடவை ஆறுதலாக வாசிக்க வேண்டும். அதைச் செய்யமுடியாத நிலையிலுள்ளேன்.

கவிதை பற்றிய கருத்து, கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை – பக்தி, போராட்டம் சம்பந்தமான மனப்பாங்கு – எல்லாமே எனக்குப் பிடித்துள்ளன.

பொறுப்புணர்ச்சி மிக்க – கவித்துவம் நிறைந்த நல்ல கவிஞன் த.ஜெயசீலன் என்பதே என் கணிப்பு.

சிற்பி.சிவசரவணபவன்