உடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்

8. வல்வெட்டித்துறை,
12.11.2001

மழையைக் கிழிக்க அஞ்சி, ஒரு மண்டபத்துள் நின்றவேளை ~கனவுகளின் எல்லைக்குள்ளும்|, அப்பாலும் நீந்தினேன். அதில் சில கவிதைகளை ஏலவே படித்திருக்கிறேன்.

எல்லாவற்றிலும் தொனிக்கின்ற ஏக்கவுணர்ச்சி என்னை வெகுவாகப் பாதித்தது. காலத்தைப் பிரதிபலிக்காத, நெருக்குதல்களை வெளிக்கொணராத படைப்புக்கள் பின்தள்ளப்படும். அந்த வகையில் ~கனவுகளின் எல்லை| நின்று நிலைக்கும்.

யேசு அண்ணையின் விமர்சனம் படைப்பாளியின் வளர்ச்சிக்கு இடப்படு;ம் உரம். அவர் தம்மனதில் கெடுதலாக எதையும் நினைத்து விமர்சிப்பதில்லை. ஒரு சில விடயங்கள் அவருடைய நோக்கில் சரியாகவும், மற்றவர்களுக்குத் தவறாகவும் தென்படுவதுண்டு. (சரிகள்?)

மழைக்குள் கரம் பற்றி நடப்பது பற்றிய அவரது சிந்தனை, ஏனைய கவிதைகளுக்குப் புறநடை என்பதாக இருக்கலாம். தவிர, அக் கவிதையில் தவறேதும் இல்லை.

அப்பால் நீந்தினாலும், நுஓயுஆ முடிய இன்னும் சுவைக்கவுள்ளேன். ஒவ்வொரு சொல்லும் கோடிடும் அர்த்தங்கள் திரும்பத் திருப்பப்படிக்கவே வெளிப்படும்.

இந்துவின் உற்பத்திகள் சோடைபோவதில்லை என்பர்.

வாழ்த்துக்கள்

அன்புடன்,
உடுவில் அரவிந்தன்