க.கிருஷ்ணசாமியின் கடிதம்

அன்பான திரு.ஜெயசீலன் அவர்கட்கு,
அன்புடன் நலம்,
தங்கள் நலம் நன்றாகுக. தங்களின் கவிதைநூல் வெளியீட்டு அழைப்பிதழ் உரியவேளை பெற்றேன். மகிழ்ந்தேன். உதயன் பத்திரிகையில் வெளிவரும் தங்களின் கவிதைகாணும் போது ரசித்து மகிழ்வதுண்டு.
இலட்சியப் பெருநோக்குடன் தாங்கள் வளமான கவிதைகள் எழுதும் வாண்மையை வளர்த்துக்கொண்டீர்கள். மேலும் சிறப்பான முறையில் முருகையன் பாவலர் சத்தீய சீலன் போன்றோர்கள் போல் துலங்க வேண்டுமென வாழ்த்துகின்றேன். நான் அறிந்தவரை நல்ல சூழலைப்பெற்றுள்ளீர்கள். அல்லாமலும் தாங்கள் இளமைக்காலத்தில் தமிழை சீரிய முறையில் ஆழப்பதிக்க ஆசான்களையும் வாழ்த்த வேண்டியுள்ளது.
மேலும் நன்கு உயர்நிலையடைய வேண்டுமென அம்மனை வேண்டுகின்றேன். அங்கு வந்து நேரில் வாழ்த்த முடியாமைக்கு வருந்துகின்றேன். பிரயாணம் செய்து வந்து பின் அங்கும் சிரமப்படவேண்டும். உடல்நிலையும் உகந்தாயில்லை, மன்னியுங்கள்.

வணக்கம்,
இங்ஙனம், அன்புள்ள.
க.கிருஷ்ணசாமி.