ஜான்சிராணி – யாழ்ப்பாணம்.

.‘கனவுகளின் எல்லை’ எனது நோக்கு ஒன்று

கவிதை புத்தகம் தேடி அலைகின்ற இன்றைய இளசுகளுக்கு அமைவாக புத்தக அளவும், தடிப்பும் காணப்படுகின்றன. வெளியீட்டின் போது வழக்கமானவர்கள், பழக்கமானவர்கள், ஊரில உலகத்தில பெரியவர்கள் என்றில்லாமல், இவர்களும் அத்தகையவர்களே என ஐயா அவர்கள் கௌரவிக்கபபட்டமை பாராட்டுதலுக்குரிய முதல் விடயமாகும்.
மறைக்கப்பட்டும், மறுக்கடிக்கப்பட்டும் வருகின்ற ஒரு விடயம் முன்னட்டைப்படமாகக் காட்டப்பட்டுள்ளமை., மறைக்க, மறந்துபோக முயற்சிக்கின்றவர்களுக்கு எச்சரிக்கையாகவும் உண்மையிலேயே மறந்து போனவர்கள் விழிப்படையச் செய்வதற்குமான ஒரு முயற்சியாகும். இது வரவேற்கத்தக்க விடயம்.
பின்னட்டையில் “எந்தனுக்கா சேருவது? உனக்கெல்லோ சேருமது! இப்பெருமை பெறுபவர்(ள்) யாரோ?
தொகுப்பெங்கும் விரவியுள்ள பூச்சற்ற பேச்சுமொழிச் சொற்கள் கவிதைகள் மெருகுபடுத்துகின்றன. இன்று பெரும்பாவலராய்த் தன்னை நினைப்பவன் பாவிக்க வெட்கப்படுகின்ற சொற்கள் – பாவித்தால் தான் தாழ்ந்து விடுவோமோ என்றஞ்சும் சொற்கள் இவை. உ–ம் அடிப்பிடிச்சுப்போச்சுன்னழகு! இந்த ஒரு சொல்லால் தமிழின பாடு இதயத்தில் உறைகின்றது.
சொப்பனங்கள் நனவாக வரம்தா மீட்டெடுப்பேன். உன்னை என்ற நம்பிக்கை மெச்சப்படவேண்டியது. இருந்தும் இந்த நம்பிக்கை.
‘நாளை தெருவிலென்னை விடுவியோ……
‘என் கைகோர்த்தா கொள்ளும், இல்லாட்டி விட்டிட்டா போகும்…
போன்ற வரிகளால் குறைந்து போகக்கூடாது.
பள்ளி எழுச்சி, உயிர்ப்பா என்பாட்டு, அற்றத்திங்கள் அவ்வெண்ணிலவில்…….. மெய்சிலிர்க்கின்றது. இத்தனை வயதில் இப்படியும் எழுத ஒருவரா என்று.
வெண்பா வகையில் அமைந்த ‘கை’ மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அமுதூட்டும் தமிழே குறிப்பிட்டுக் கூறக்கூடிய கவிதை.. ஓர் கவிதைத்தொகுப்பினுள் எனக்குப் பிடித்தவரிகள்.

“நாளை நான் பொரிப்பேனா? கூழாகிப் போவேனா?”
நிகழ்கால மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்கின்ற முக்கிய விடயங்கள் அத்தனையும் தொகுப்பினுள் அடங்கி இருப்பது தொகுப்புக்கு விசேசம்.
குறைகளும் கூறவேண்டும் என்ற நினைப்பில் துழாவினேன். கிடைக்கவில்லை இங்கு மொத்தத்தில் ஆரம்பகால கவிதைகள் என்றும் மிகவும் சிறப்பானவை. உன் பனித்தொடரில் குப்பு விசிறட்டும்.
பணி தொடர இன்றும் நீ புதுக்கவிதை,

ஜான்சிராணி,
யாழ்ப்பாணம்.
கடந்த கால அமுது ஒன்றில் கவிதை ஒன்று எப்போதோ படித்தேன் (தனக்கென இருந்தது)
தொடர்ந்தும் அமுதுவுக்கு எழுதலாமே.