எஸ்.ஆர்.தனபாலசிங்கம்

த.ஜெயசீலன்,
அன்புடையீர்,
‘நீங்களும் எழுதலாம்’ இரு மாத கவிதை இதழின் ஓராண்டு சிறப்பிதழினை தங்களுக்கு அனுப்பி வைப்பதில் மகிழ்வடைகின்றேன். பெரிய ஐங்கரன் அவர்கள் தங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விவரத்தையும் தந்தார். தாங்கள் ஒரு கவிஞர் என்ற வகையில் தங்களது ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.
கவிதை ஆர்வலர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதும் தமிழ்க்கவிதைத் துறையை ஆரோக்கியமான திசைவழியில் இட்டுச்செல்வதும் ஆகிய நோக்கங்களைக் கொண்டு கைக்கடக்கமான வடிவத்தில் ‘நீங்களும் எழுதலாம்’ வெளிவந்து கொண்டிருக்கிறது. உங்களது இலக்கிய நண்பர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தி இதன் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவீர்கள் என எதிர்பார்த்து நினைவு செய்கின்றேன்.

அன்புடன்,
எஸ்.ஆர்.தனபாலசிங்கம்.