திரு.வசந்தகுமார்

எனது இல: : PNY/DS/culture/2012
பிரதேச செயலகம்,
பூநகரி,
15.08.2012.

த.ஜெயசீலன்
பிரதேச செயலர்,
பிரதேச செயலகம்,
பருத்தித்துறை.

பூநகரி பிரதேச கீதம் ஆக்கல் தொடர்பான நன்றியறிவித்தல்
மேற்படி விடயம் சார்பானது, எமது பூநகரி பிரதேச செயலக கீதத்தினை ஆக்கல் தொடர்பாக தங்களிடம் கோரப்பட்டபோது, மனமுவந்து கவிநயமும், கலைநயமும் பொருந்திய பிரதேச கீதத்தினை யாத்துதவியதற்கு, பிரதேசம்சார் அகம் மகிழ் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எழுத்து வடிவிலுள்ள சிந்தைக்கினிய எமது பிரதேச கீதத்திற்கு, செவிக்கினிய மனதுநிறை இசையமைப்பதற்கான ஏற்பாட்டினைச் செய்து தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திரு.வசந்தகுமார்.
பிரதேச செயலரும்,
கலாசாரப் பேரவையின் தலைவரும்,
பிரதேச செயலகம்,
பூநகரி.