மா.அனந்தராஜன்

அன்புக்குரிய கவிஞர் அவர்களே, வாழ்க
தங்களுடைய கவிதை நூலான “எழுதா கவிதை” பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் வெளியீடு செய்யப்பட்டபோது நானும் அங்கிருந்தேன். அங்கு வந்தவர்கள் எல்லாம் தங்கள் நூலின் பலபகுதிகளையும் ஆய்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தமை என் மனத்தையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கல்வி மான்கள் பலர் பதவிக்காக உறவுகளை உதறி சமூகத்தை நசித்து, மொக்குகளாக்கி வாழத்துடிக்கும் இந்நேரத்தில் கவிஞர் த.ஜெயசீலன் போன்றவர்களும் இருக்கின்றார்கள். வாழ்கின்றார்கள் எண்ணுகையில் பேருவைகொள்ளவேண்டியதாயுள்ளது.
கல்வி ஆற்றல் குறைந்த எனக்குத் தங்களுடைய நூலின் பின் பக்கத்திலுள்ள அறிமுகம் தான் மிகவும் பிடித்தது. அந்தக் கருத்துக்களை யாரும் வடித்ததில்லை. “ பதவி வரும் போது பணிவு வரவேண்டும். என்ற உண்மையை அது எடுத்தியம்புகின்றது. எத்தனையோ வளங்கள் கொண்ட தங்களிடம் காணப்படும் எளிமை என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது. அதுதான் யாரும் எழுதாத கவிதை என்பது எனது கருத்து. இப்படியானவர்களின் முயற்சிகள் என்றும் வாழும், நல்ல பயன்களைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
சிறியேனின் கருத்துக்கள் தங்களைப் புண்ணாக்கினால் தயவு செய்து மன்னிக்கவும். தமிழ் வாழ்க, தாங்களும் தமிழை வாழவைக்க, மேலான, கருமங்களை ஆற்ற, எல்லாம் வல்ல இறையருள் வேண்டி நிறைவு செய்யும்

தங்களால் கவரப்பட்ட,
அன்பன்,
மா.அனந்தராஜன்.