கவிஞர். வே.ஐ.வரதராஜன்

கம்பன் புகழ் பாடிக்
கன்னித் தமிழ் வளர்க்கும்
தம்பி ஜெயசீலன்
தகவுடைக் கவிஞனால்
அம்புவியில் அழகுறக்
கவிதை செய்தே
அவையினைக் கவரும் சீலன்
அன்னவர் மீது அளவிலாக்
காதலுற்றே அழைத்திட்டேன்
கலைமகளின் திருக்கோவில்
நல்லூரான் திருவடியை
நாளும் தொழுதேத்தி
நலமுற ஆட்சி செய்யும்
வல்லதோர் செயலராக
உயர் பதவியும் உற்றோன்
வாணி அருள் வரமே பெற்று
வளமுடன் வாழ வேண்டி
அன்னையின் பாதம் பணிந்தோம்
அரங்கினில் மிளிரும் ஐயா!

கவிஞர். வே.ஐ.வரதராஜன்
அறங்காவலர்.
சரஸ்வதி கோவில்
ஆரியாலை.