கலையோடு கல்வியின் பெருமையையும் கொண்டு விளங்கும் ஈழத்திருநாட்டின் மூளையாம் பருத்தித்துறை மண்ணில் கூவில் தீபNஐhதி சனசமூக நிலையத்தின் 50வது ஆண்டு நிறைவு பொன் விழாவை கொண்டாடும் முகமாக வெளிவரும் ‘தீபNஐhதி’ மலருக்கும் வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பேருவகையடைகிறேன்.
சனசமூக நிலையங்கள் சமூக முன்னேற்றத்திற்கான செயற்பாட்டு மையங்களாகும். ஒவ்வோர் ஊரிலும் உள்ள சமூகங்களில் பல்வேறுவகைப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் நிலையமாக அவை வளர்ச்சியடைந்துள்ளமை சிறப்பானதாகும்.கோவிலுக்கு அடுத்ததாக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களாக இன்று சனசமூக நிலையங்களே திகழ்கின்றன.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக கணணி,தொலைக்காட்சி,கைத்தொலைபேசிகளில் இன்றைய இளந் தலைமுறைகள் மூழ்கியுள்ள இக் கால கட்டத்தில் இளந் தலைமுறைக்கு ஆரோக்கியமான சாதனமாக, நவீன செயற்திறனுடன் கூடிய உடல் உள மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து செல்வதன் மூலமாக சனசமூக நிலையங்களை தற்போதைய தகவல் பரிமாற்ற யுகத்திற்கும் பொருத்தமான மையங்களாகவும் மாற்ற முடியும்.
செயற்பாட்டு தளத்தில் பல சவால்களை எதிர் கொண்டாலும் அவற்றை மீறி தீபNஐhதி சனசமூக நிலையமானது பல மகத்தான பணிகளையாற்றி தான் சார்ந்த மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வெற்றியோடு வீறுநடை போடுகின்றது.
நான் பருத்தித்துறை பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஆறு ஆண்டுகளில் தீபNஐhதி சனசமூக நிலையத்தின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகளையும,; கட்டுக்கோப்பான நிர்வாகத்தினையும் கண்டு வியந்திருக்கிறேன். அங்குள்ள முதியவர்கள் இளையவர்களும் சனசமூக நிலையத்தை தொடச்சியாக சிறப்பாக செயற்படவும் இயங்கு நிலையில் வைத்திருக்கவும் ஒருங்கிணைந்து ஒருமித்த கருத்துடன் எடுத்த முயற்சிகளை நேரடியாகப் பார்த்துள்ளேன். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் சிறப்பாக இயங்குகின்ற சனசமூக நிலையங்களில் ஒன்றாக தீபNஐhதி சனசமூக நிலையம் விளங்கியது என்பதனை அடித்து கூறுவேன் தீபNஐhதி சனசமூக நிலையத்தின் பல நிகழ்வுகளில் கலந்து மகிழ்ந்த நினைவுகள் மனக்கண் முன்; நிழலாடுகின்றன.
இவ்வருடம் பொன் விழா ஆண்டில் கால் பதிக்கும் தீபNஐர்தி சனசமூக நிலையத்திற்கும் அதன் 50 ஆண்டு சாதனைகளை பதிவு செய்யும் ஆவணமாக வெளிவரும் ‘தீபNஐhதி’ மலர் வெளியீட்டுக்கும் எனது இதயபூர்வ வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இப்பணிக்கு முன்னின்று உழைக்கும் நிர்வாகத்தினர்,அங்கத்தவர்கள்,மலர்க்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் தெரிவித்துப் பணிகின்றேன்.
இ.த.ஜெயசீலன்,
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
பச்சிலைப்பள்ளி.