பனை, தென்னை,கடல் வளம் சூழ்ந்த கிளிநொச்சி மாவட்டத்தில் மகாதேவசுவாமிகள் சிறுவர் இல்லம் ஆனது யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட சிறவர்க்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதமாகும்.இவ் இல்லம் ஆனது 1997ம் ஆண்டு தோற்றம் பெற்று 25வது ஆண்டினை பூர்த்தி செய்து வெள்ளி விழா கொண்டாடுவதை இட்டு பெருமை கொள்கின்றேன் இலங்கை நிர்வாக சேவையின் பயிற்சியாளர்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த போது 2004ம் ஆண்டில் இவ் ஆச்சிரம பணிகளை நேரடியாக பார்வையிட்ட நினைவுகள் நிழலாடுகின்றன.அப்போது கிளிநொச்சியில் இருந்த அரச அதிபர் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோர் இவ் ஆச்சிரம முயற்ச்சிக்கு பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இவ் இல்லத்தில் முன்பள்ளி தொடக்கம் உயர் தரம் வரையான மாணவர்கள் கல்வி பயின்று பல்கலைக்கழகம் வரை சென்று பட்டம் பெற்று தனியார் மற்றும் பல்வேறு அரச துறைகளில் பணியாற்றுவது இவ் இல்லத்தில் சிறப்பான செயற்பாட்டுக்கு சான்றாகும்.இவ் மாணவர்கள் கல்வித்துறையில் மட்டுமல்லாமல் பிற ஆளுமை விருத்தி செயற்பாடுகளான தமிழ்தினப்போட்டி,விளையாட்டப்போட்டி மற்றும் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் கூட பல வெற்றிகளையும் விருதுகளையும் பெறுகின்றமையையும் பாராட்டி மகிழ்கின்றேன்.
இவை தவிர கணினிப் பயிற்சி,தையல் தொழிற் பயிற்சி போன்ற எதிர்கால வருமானம் ஈட்டும் செயற்பாடுகளுக்கான பயிற்சிகளை இவ் இல்லத்தார்கள் வழங்குவதும் இவ்வாறு பல சமூக பணிகளை ஆற்றுகின்ற இல்ல சமூகத்தினரையும் பயிற்சியாளர்களையும் அவர்களுடன் தொடர்புடைய ஏனைய நல்லுள்ளம் படைத்த சேவையாளர்களையும் மனதார இவ் இல்லப் பணிகள் மென்மேலும் செழித்தோங்க எல்லாம் வல்ல இறைவனைப் போற்றிப் பணிகின்றேன்.
இ.த.ஜெயசீலன்,
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
பச்சிலைப்பள்ளி.