அணையாத கனவுகள் – வாழ்த்துரை

பிரபா அன்பின் ‘அணையாத கனவுகள்’ என்ற சிறுகதை நூல் கண்டு மகிழ்ந்தேன்.உலக மங்கையின் வடிவமைப்பில் ‘கோபால் வெளியீட்டாக’ வெளிவந்திருக்கின்ற ‘அணையாத கனவுகள்’ 18 சிறுகதைகளை தாங்கி வெளிவந்திருக்கிறது.
ஈழத்தில் நடந்து முடிந்த யுத்தத்தின் தன்மையும், அதன் பங்காளிகளாக இருந்த போராளிகளின் படைப்புக்களும் பல முன்னரும் நூல் வடிவில் வெளிவந்து இரு;க்கிறது.அதன் தொடர்ச்சியாக யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கழித்து முன்னாள் பெண் போராளி ஒருவருடைய அனுபவ பகிர்வு பதிவுகளாக ‘அணையாக கனவுகள’; நூல் வெளிவந்திருக்கிறது. “போர் முடிந்ததன் பிற்பட்ட காலங்கள் என்பது பேபராளிகளிற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த பெண்களிற்குமே பாதுகாப்பற்ற தன்மையை தருகின்றது.”என்று கூறும் இவர் “சமூகத்துடனான எமக்கான போராட்டம் என்பது வலிகளையே வாரி வழங்குகின்றது.முன்னாள் போராளிகளாகிய நாம் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலியின் விம்பங்களையே ‘அணையாத கனவுகள’ என்ற நூலிற்குள்; கோர்த்தேன்”என்றும் கூறிச் செல்கின்றார்.
பல்வேறு உயிர்,உடமை இழப்புக்களையும், ஆறாத வடுக்கள் ரணங்களையும், போரில் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் பெற்றிருந்தன என்பது கண்கூடு.30 ஆண்டுகால தொடர்ச்சியான யுத்தத்தில் வெவ்வேறு காலகட்டங்களின் கள சூழல்களை இக் கதைகள் படம் பிடித்து காட்டுவதுடன் யுத்தம் நிறைவடைந்து இறுதி யுத்த காலங்களில் சாட்சிகளாகவும் அதன் தாக்கங்களில் இருந்து விடுபடாத நீட்சிகளாகவும் இக் கதைகள் அமைந்திருக்கினறன.
இயல்பான ஆற்றோட்ட நடையும், தொடர்ச்சியான சம்பவ விபரிப்புக்களும், கற்பனை நாயகர்களாக அன்றி நிஐத்தில் தான் கண்ட கதாபாத்திர வார்ப்புக்களும,; போரின் பங்காளர்களாக இருந்த போதும் இக் கதை மாந்தர்களின் இலட்சிய வாழ்வு, அவர்களின் மென்மையான மனப்பங்குகள் அவர்களுடைய உள்ளத்து ஆதங்கங்கள் ஏக்கங்கள் என்பவையும் இச்சிறு கதைகளில் உயிர் துடிப்போடு கொட்டிக்கிடக்கின்றன.
யுத்தம் நிறைவடைந்து இன்று சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில், யுத்தத்தின் எச்சங்கள் சுவடுகள் கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்ட வேளையில்;, 30ஆண்டுகளாக தொடர்;ந்த யுத்தம் பற்றி அறிந்திராத இளைய தலைமுறைகள் வந்துவிடட சூழலில் தாம்தாம் யுத்த நாயகர்கள் அவர்களின் பிரதிநிதிகள் என யார்யாரோஎல்லாம் உரிமைகோரி வரும் நேரத்தில், யுத்தத்தின் வலிகளையும்,ரணங்களையும் வெளிப்படையாக பேசிச் செல்லக் கூடிய புறச்சூழல் இல்லாத காலத்தில், யுத்தத்தின் நேரடிப் பங்காளிகளாகவும் சாட்சிகளாகவும் திகழ்ந்து ஒரு காலத்தில் காவிய நாயகர்களாகவும் இன்று அனேகமாக, கருத்தில் எடுக்கப்படாதவர்களாகவும் மாறிவிட்டவர்களுடைய மெல்லிய குரல்கள் பலவற்றுக்கிடையில் ஒரு வலிய குரலாக ‘அணையாத கனவுகள்’ சற்று துணிவோடேயே வெளிவந்து இருக்கிறது.
ஆற்றல் மிக்க சிறுகதை ஆசிரியருக்குரிய அம்சங்கள் கொண்டிருக்கின்ற பிரபா அன்பு தான் நேரடியாக அனுபவித்த விடயங்களை அழகியல் கெடாமல் உயிர்த் துடிப்புடன் பதிவு செய்திருக்கின்றார்.இவை வெறும் கதைகள் அல்ல ஒர காலத்தின் சாட்சிகள்.இவை எமது இன்றைய, நாளைய தலைமுறைகளுக்கு நிச்சயமாக சென்றுசேர வேண்டிய வரலாற்றுப் பாடங்கள்;.
காலத்தின் சாட்சியாக திகழ்கின்ற பிரபா அன்பு ஒரு கதா ஆசிரியராக தொடர வாழ்த்துதோடு அவருடைய ‘அணையாத கனவுகள்’ என்ற நூல் போன்ற பல படைப்புக்கள் அவரிடமிருந்து எதிர்காலத்தில் வரவேண்டும் என்று கேட்டு அவரை வாழ்த்தி பணிகின்றேன்..

அன்புடன்
த.nஐயசீலன்