சுமார் ஒரு வாரத்திற்கு முன் யாழில் ஐந்து நூல்களின் வெளியீடு ஒன்று நடைபெற்றது அதில் ஒரு நூலிற்கான நயப்புரை ஆற்ற அழைக்கப்பட்டிருந்தேன் எனது நயப்புரையை தொடர்ந்து நயப்புரை ஆற்றிய நூல் ஆசிரியர் உட்பட சில ஆர்வலர்கள் என்னுடன் அளவளாவிய போது நான் சங்கரி என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தினர் உண்மையில் அதற்கு முன்னால் அவரை அறிந்திருக்கவில்லை
மறுநாள் எதேர்ச்சியாக கவிஞர் பத்மநாதன் அவர்கள் நான் எழுதிய தற்கால கவிதைகளில் ஒரு கவிதை பற்றி கலந்துரையாடிய போது சங்கரி நன்றாக எழுதுகிறார் என விசாரித்தார் அப்போதுதான் முதல் நாள் சந்தித்த சங்கரி தான் அவர் என எனக்கு பொறிதட்டியது அதனைத் தொடர்ந்து அவரால் 2022 2023 களில் எழுதப்பட்ட சில கவிதைகளை முகநூலில் பார்க்க முடிந்தது. அக் கவிதைகள் வெளி வந்த சில நாளில் மிக காத்திரமான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் அவை பெற்றிருப்பதனையும் பார்க்க முடிந்தது எப்படி அண்மை காலம் வரை இவர் எனது கவிதைப்பரப்புக்குள் வராமல் போனார் என ஆச்சரியப்பட்டேன்.
தமிழ் கவிதை பரப்பில் பெண் கவிதாயினிகளின்; பட்டியல் நீண்டது. ஈழத்துப் பெண் கவிதாயினிகளின் பட்டியல் அதற்கு சவால் விடுவதாகவே இருந்திருக்கிறது ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன் சிலரும் ஆரம்பிக்கப்பட்ட பின் சில கவிதாயினிகளும் தோன்றியிருக்கிறார்கள் இவர்களில் சிலர் நேரடியாக போர்க்களங்களில் நின்று போராடியவர்கள் வேறு சிலர் போராட்ட களத்தில் நிற்காதவர்கள் ஈழப் போர் தோன்றிய பல்வேறு இயக்கங்கள் சார்ந்தும் பல கவிதாயினிகள்; முகிழ்ந்திருக்கிறார்கள் சில பெண் கவிதாயினிகள் புலம்பெயர்ந்து சென்று அங்கும் தம் கருத்தியல் சார்ந்து படைப்புத் துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
90களில் அனார் பகீர்ஜஹாம் தாட்சாயினி போன்றோர் உட்பட பலர் ஈழத்து கவிதை துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள் இவர்களில் அனார் இன்றைய நவீன கவிதை துறையில் தனித்துவமிக்க ஒரு இடத்தை அடைந்திருக்கின்றார்.
யுத்தம் நிறைவேறிய பின்பும் நேரடியாக யுத்தத்தை சம்பந்தப்பட்ட சம்பந்தப்படாமலும் பல கவிதாயினிகள் தோன்றிவருகிறார்கள். முகநூல் முகநூல் கவிதை குழாங்களில் கவிதை வட்டங்கள் என கவிதை மலிவான பந்தமாக மாறிவிட்ட இந்த காலத்திலும் ஆர்வமிகுதியால் பாடசாலை மட்டத்திலும் அதனை தாண்டியும் பல கவிதாயினிகள் தோன்றியுள்ளனர் இவர்களிடம் இருந்து வெளிவரும் கவிதைகளின் வடிவம் பண்பு தரம் என்பவை பற்றி பல்வேறுபட்ட கருத்தாக்கங்கள் அபிப்பிராயங்கள் உள்ளன தொடர்ச்சியாக கவிதைகளை எழுதுதல் அவற்றிற்கு ஒவ்வொரு குழுக்களாக பாராட்டுக்களும் விமர்சனங்களும் முன் வைத்தனர்
வாராவாரம் போட்டிகள் வைத்து பரிசில்களும் பாராட்டுக்களும் வழங்குதல் என முகநூலிலும் இணையதளங்களிலும் கவிதை தொடர்பான பல்வேறு விடயங்கள் நிதமும் அரங்கேறி வருகின்றன உலகெங்கும் இருந்து எழுதும் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் ஒரு வலையமைப்பில் இணைந்து பேசிப்பாடி
விமர்சித்து புதுப்புது விடயங்களை வெளியிட்டு வருகிறார்கள் இவர்களில் பெண் கவிதாயினிகளின் எண்ணிக்கையும் கணிசமானதாக காணப்படுகின்றது
இந்த இடத்தில் அனார் போன்று நவீன பின் கவிதைகளில் ஆக்கிரோசமாக தன்னை ஈடுபடுத்தாமலும் சாதாரணமாக வரிகளை முறித்தெடுதி கவிதைகளில் இருந்து தாமே களிப்பை கதைத்து போர்க்களங்களில் இவ் இரு எல்லைகளுக்கு இடையிலும் கடும்நவீனத்தில் நம்பிக்கையில் நாட்டம் கொள்ளாமலும் முழுமையாக மரபுக்குள் சிக்கிக்; கொள்ளாமலும் ஒரு கவிஞராக சங்கரி வந்து சேர்கிறார் ஈழத்தில் தோன்றிய முதிர்ச்சி மிக்க புது நவீன கவிதைகாரர்களின் சாயல்களை சங்கரியின் கவிதைகளில் காணக்கூடியதாக உள்ளது எளிய ஆற்றோட்டமான நடை தனித்துவமான பாணி புதிய சிந்தனை வீச்சு புதுக்கவிதைமுறைகளில் புலப்படும் உத்திமுறைகளை உள்வாங்கி தனித்துவமாக ஒரு திடீர் மின்னல் சிரிப்பு அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் சிக்கல் குழப்பம் இல்லா வரிகளுடன் இவர்களின் கவிதைகள் அமைந்திருக்கின்றன.
இவர் கடந்த காலங்களில் எழுதி முகநூலில் காணப்படும் சில கவிதைகள் இன்று சராசரியாக கவிதை எழுதிவரும் இளம் கவிதாயினிகளின் கவிதைகளில் இருந்து வேறுபட்டு முதிர்ச்சி உடையவையாக சொல் பொருள் வடிவமைப்புடன் விளங்குகின்றன. அன்றாட வாழ்வியல் அனுபவங்கள் மனச்சிக்கல்கள் வாழ்வின் இரசிப்புக்கு உரிய மென் தருணங்கள் சாமானியர்கள் கடந்து செல்லும் சிறு சிறு விடயங்கள் என்பவற்றையும் ரசனை நோக்கில் அணுகுவதாகவும் புதுமையான சிந்தனை ஓட்டங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் இவரது கவிதை அமைகிறது.
இறுக்கமான நவீன பின்; நவீன இருமைச்சாயல் அற்ற எளிமையான பொருள் விளங்கும் படியாக அதிக உவமை உருவ ஜோடிகளை கொண்டிராத அதே நேரம் மரபுக் கவிதைகளின் அணிகள் இலக்கணங்களை உள்வாங்கியிராத இடைநிலை கவிதைகளை சங்கரியின் கவிதைகள் அமைந்துள்ளன.
சங்கரியின் கவிதை பிரவேசம் அவரின் கவிதை முயர்ச்சி அனுபவம் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை எனினும் ஐPவநதியில் அதன் ஆசிரியர் பரணீதரன் சங்கரியின் கவிதை பற்றிய கட்டுரை ஒன்று எழுதி இருப்பது என’ காதுகளில் பட்டது அதில் அவர் சாங்கரியை ஒரு நட்சத்திர கவிஞர் என அடையாளப்படுத்தி இருக்கின்றார் இது சங்கரிக்கு ஜீவநதியிடம்; இருந்து கிடைத்த அங்கீகாரம் என்றும் கூறலாம்.
சங்கரி ஓரிரு கவிதை நூல்களை வெளியிட்டு இருக்கின்றார். தற்போது வெளிவர உள்ளது புதிய தொகுதி ஆகும.; இதில் உள்ள கவிதைகளும் சங்கரியின் வழமையான கவிதை பற்றி தொடர்வதை வாசிக்கும் போது இது சங்கரியின் சாயலென அடையாளப்படுத்த கூடியதாக இருக்கின்றது இது சங்கரியின் பலமா பலவீனமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.