எழுதாத ஒருகவிதை – குறிஞ்சிநாடன்

சமகாலஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகத் திகழ்பவர் திரு. த.ஜெயசீலன். இவர் ஏற்கனவே கனவுகளின் எல்லை(2001),கைகளுக்குள் சிக்காதகாற்று(2004) ஆகியகவிதைத் தொகுதிகளை வெளிக்கொணர்ந்தவர். தற்போது ஒன்பது வருட இடைவெளியின் பின்னர் இந்த எழுதாத ஒருகவிதை என்ற நூலைவெளிக்கொணர்ந்துள்ளார்.

இவரதுமுன்னையகவிதைத் தொகுதிகள் இரண்டிலும் பெரும்பாலன கவிதைகளின் பாடுபொருளாகயுத்தக் கொடுமைகள்,தேசிய உணர்வு,விடுதலைவேட்கை,மனிதத்தின் மகத்துவம் போன்றவை இடம்பெற்றிருந்தன. அக்காலத்தில் கவிஞர் ஓர் ஆசிரியராக இருந்தார்.

தற்போது வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதியில் அவரது பாடுபொருளில் ஒருமாற்றத்தைக் காணமுடிகிறது. 110 கவிதைகள் அடங்கிய இக்கவிதைத் தொகுதியில் உள்ளகவிதைகளில் பெரும்பாலானவை இயற்கையையும், இயற்கையோடு ஒன்றிய வாழ்வையும்,மனிதத்தையும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.

இக்கவிதைத் தொகுப்புவெளிவரும்போதுஅவர் வடமராட்சிவடக்குப் பிரதேசச் செயலளராகப் பணியாற்றுகிறார். எழுதாத ஒரு கவிதை என்ற மகுடத்தில் அவர் எழுதியகவிதையில் அவர் தனது மனக்கிடக்கையை இவ்வாறுதெரிவிக்கிறார்:

எதற்குமேஅஞ்சாமல் எவரோடும் சமரசம்
செய்யாமல்
துன்பம் திரண்டுதுரத்துகையில்…
கையுயர்தித் தர்மக் கடன்தீர்த்துச்
சரிபிழையின்
மெய்யுரைத்துயாவரையும்
மேன்நிலைக்குக் கொண்டுசேர்த்து
உய்விக்கும் ஒருகவிதை,
ஒளிரும் லயக்கவிதை,
எழுதத்துடிக்கிறேன்.
தொடர்ந்தும் ஆயிரமாய் வெற்றுக்கவிஎழுதக்
களமெனக்குவாய்த்தாலும்
இப்படிஒருகவிதைஎழுத இடந்தராத
துர்ப்பாக்கியத்துள்ளேதுவண்டுஉளறுகிறேன்!
நேற்றுஎழுதநினைத்தேன்
இன்றைக்கு
ஏற்படாதசந்தர்ப்பம் எனை மிரட்ட
ஊமையானேன்!
நாளைஒருகவிதை
நாணயமாய் நானெழுதக்
கூடுமோஎன்சூழலிலே
குற்றுயிராய்க் கேட்கிறேன்!…

ஓசைநுணுக்கங்களைச் சிறப்பாகக் கையாளவல்லவரான ஜெயசீலனின் கவிதைகள் மரபுச்சாயல் கொண்டவை. வாய்விட்டு பாடி மகிழக்கூடியவை.த.ஜெயசீலனின் வெற்றிப்படைப்பு இந்நூல். மேலும் பல வெற்றிப்படைப்புகளை வெளிக்கொணர வாழ்த்துகிறோம்.

நூல்: எழுதாதஒருகவிதை
ஆசிரியர்: த. ஜெயசீலன்
வெளியீடு :அருணன் பதிப்பகம்
பதிப்பகம்,நல்லூர்.
விலைரூபா: 300ரூ.

(இச்சுருக்கக் குறிப்பு பங்குனிமாத ஞானம் 166 ம் இதழில் வெளிவந்தது. இதை எழுதியவர் குறிஞ்சிநாடன் ஆவார்.)

Leave a Reply