நற்றமிழ் நடைஞானிபண்டிதர் சச்சிதானந்தன்.

அற்புதக் கவி ஆயிரம் ஆக்கிடும்
அருமையானகவிஞன் தமிழினை
முற்றும் துய்த்துதெளிந்த‘நெடுமுனி’
முயன்றுஆய்ந்துநிமிர்ந்தபெருந்தகை
சிற்றறிவுள்ளோர் எள்ளும் உடை,சடை
சிரிப்புசெய்கைகளோடுஉலவிய
நற்றமிழ் நடைஞானி,எளியனாய்
நமதுமுன் நடமாடியபொக்கிஷம்.

ஆழ்ந்தகல்விப்புலமை,பலமொழி
ஆற்றல் மற்றும் அசாத்தியஞாபக
ஆளுமை,பலதத்துவம் சாத்திரம்
அழைந்தநெஞ்சம்,அறிவுப் புதையலை
தேடித் தேடி இறுதிவரையிலும்
திரிந்தஒளிவிழி,அனுபவச் சூளையில்
காய்ந்து இறுகிக் கனிந்தஉடல், இவை
கரைந்துபோனதோ…. காலமழைதனில்?

சாகும் வேளைதமிழ்க்கவிபாடத் தன்
சாம்பல் செந்தமிழ் மணக்கவும் வேண்டிய
தாடிமேதையை,எம் தலைமுறைகண்ட
தமிழ்ப் புலமையின் கடைசிக் கொழுந்தினை,
பாலமாகப் பழமைபுதுமையைப்
பார்த்திணைத்திட்ட‘பண்டிதர் க.சச்சி
தானந்தன்’என்றதிருவை இழந்தனம்.
வந்தவெற்றிடம் எப்படிப் போக்குவோம்?

Leave a Reply