இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்

நாயனக் குழலால்…ஞான
அமுதினைக் குழைத்துச் சொந்தத்
தாயெனப் பரிந்துஊட்டும்
சாவகச்சேரிமைந்தா!
நாவிலேவாணிநித்தம்
நர்த்தனம் புரிய…கான
மாரியாய்ப் பொழியும் எங்கள்
பஞ்சாபிகேசா…வாழி!

ஆழத்தில் கடலாய்,அன்பில்
அசையாதமலையாய்,உப்பாய்ப்
பார்வைக்குஎளிதாய்,நாதப்
படிப்பில் பார்போற்றும் பொன்னாய்,
ஊரூராய் இசைபொழிந்து…
உலகமும் அளந்து…தேவ
ரூபமாய் நிமிரும் ஐயன்
நீடூழிவாழவேண்டும்!

‘இசையிற் பேரறிஞன்’என்று
கம்பநற் கழகம் போற்ற,
இசைவல்லோர் வணங்கிஏற்ற,
இசைமாந்தி இரசிகர்…வாழ்த்த,
இசையிலேகலாநிதியாய்
பல்கலைஏற்க,வாழும்
இசை…உமைஅயலோர்.. நாங்கள்
இதயத்தால் வாழ்த்துகின்றோம்.

Leave a Reply