மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்

அறுபதுவயதில் இன்று
அனுபவமுதிர்ச்சிகொண்டு
அரசியற் பணியும்,அச்சில்
அவசியப் பணியும்,சொந்த
நிறுவனப் பணியும்,சேவை
நிழல் தரும் பணியும் செய்யும்
சரவணபவனார் வாழ்க!
மணிவிழாவேந்தன் வெல்க!

உதயனின் உரிமையாளர்
ஒடுங்கியே…. யாழ்ப்பாணத்தின்
கதிதுயருற்றகாலம்
கலங்காதுதடைகடந்து
எது நிஜம் என்றுரைக்க
இடையறாதுழைத்ததீரர்!
‘உதயநாயகன்’ ஆம்…வாகை
ஊடாகத் துறையில் கொண்டோர்!

யாழ் இந்துமைந்தர்…. மக்கள்
யாழிலேதெரிந்தெடுக்க
பாராளுமன்றுசென்று
பணிசெய்யும் செல்வர், இன்று
பேரோடுபுகழும் பெற்று
மணிவிழாகாணுகின்ற
நாயகர் வாழ்கஎன்றோம்!
நற்பணிதொடரநேர்ந்தோம்!

Leave a Reply