என் கவிதை

இந்த உலகில் இருக்கும் அனைவரையும்
எந்த ஒரு கொம்பனாலும்
திருப்திப் படுத்திவிட
முடியாது….என்பதுபோல்
எல்லோரும் விரும்ப வல்ல
கவிதையை எவருமே கட்ட முடியாது!
நானெழுதும் கவிதை
சிலருக்கு இனிப்பாயும்…
நானெழுதும் கவிதை
சிலருக்குப் புளிப்பாயும்…
நானெழுதும் கவிதை
சிலருக்கு உவர்ப்பாயும்…
நானெழுதும் கவிதை
சிலருக்கு கசப்பாயும்….
நானெழுதும் கவிதை
சிலருக்கு உறைப்பாயும்…
காணப் படும்;
இதற்காய் நான் கலங்க இயலாது!
எல்லோர்க்கும் பிடிக்கவேண்டும் என்று
கவியெழுதல்
என்வேலை இல்லை!
பிடிக்கிறது, பிடிக்கவில்லை
என்பதனைத் தாண்டி
எனக்கு எது வருகிறதோ…
என்மனது எதனை
எழுதென்று சொல்கிறதோ…
என்விருப்பு வெறுப்பில் எதைநான்
எழுதுவேனோ….
அதுவே என் கவியாகும் !
அதை யார் விரும்பினாலும்…
அதையார் வெறுத்தாலும்
அதைஎழுதும் என் கரமும் !

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 23This post:
  • 82413Total reads:
  • 60568Total visitors:
  • 0Visitors currently online:
?>