வரம்

“என்ன வரம் வேண்டும்”
என்றிறைவன் கனவில் வந்தான்!
என்ன வரம் கேட்கலாம் என்று
மிகக் குழம்பி
என்ன பெரிதாகத் தரப்போறான்
எனத் தயங்கி
“என்ன வரம் வேண்டுமென
இறைவனையே கேட்கின்ற
அந்த மனம் வேண்டுமென்றேன்”!
ஆடிப்போய் மறைந்த அவன்
இன்றுவரை வந்ததில்லை
என்கனவு நனவு தன்னில்!
சின்ன வரங்களேனும் தேடிப்
பெற ஏங்கி
என் தவங்கள் தொடருதின்றும்….
இன்னுமொரு சந்தர்ப்பம்
என்று வரும் என்று …வாய்ப்பைத்
தவறவிட்ட அங்கலாய்ப்பில்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply