நினைவுக் குரங்கு

நினைவுக் குரங்கு 
நிமிடத்துக் கொருதரம்….தான் 
நினைத்தபடி அங்குமிங்கும் நின்று 
பாய்ந்து கொப்புமாறி 
ஓரிடமும் கணமும் ஒதுங்காமல் 
குதித்துப் 
பாய்கையிலே…..
மனக்கிளையின் பழங்களும் 
பூ பிஞ்சும் 
நாலு திசைகளுக்கும் சிதறிடுது!
குழப்படி செய் 
இக்குரங்கு ஓரிடத்தில் இராது;
தன் குட்டிகளைப் 
பக்காவாய்க் காவியே பாயுமன்றி 
கொப்பிழக்கப் 
பாயாது!
ஆனால் பாயும் அதன் வேகத்தில் 
தேகம் தடுமாறி 
எதும் செய்ய முடியாது 
தேய்கிறது;
அதைக்கண்டு 
ஊர் கிலி கொள்கிறது!

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 9This post:
  • 77021Total reads:
  • 56352Total visitors:
  • 0Visitors currently online:
?>