இருள்

இருட்டுக்கு அஞ்சி எங்கே நாம்
ஓட ஏலும்?
இரவில் இருட்டு என்திசையிலும் அப்பி
இருக்க…
அதற்கஞ்சி எங்கே ஒளிய ஏலும்?
இருட்டுத் தொலைந்த எழிற் பகலில்,
எமைச்சூழ்ந்த
இருளெரிந்து போன இளம் பகலில்,
எங்கெங்கும்
இருட்டில்லை என்று
நிம்மதியாய் விழிமூட
இருளே…விழிகளுள்ளும் எழுந்து
ஆட்சி செய்திருக்கும்!
இருளே…அகவிழிகள் அஞ்சி
அலறவைக்கும்!
விழிமூடும் போதும் மிரட்டும்
இருட்டுக்குள்
அழகு நிறக் கனவுகளை
அரங்கேற்றத தெரிந்து கொண்டால்….
நிற ஒளிக் கனவுகளை
நித்தம் பிறக்கவைத்தால்….
இரவிருட்டை வெளிச்சங்கள்
விரட்டி அடிப்பது போல்
புற அக இருள் கொட்டம் அடக்கி
ஜெயிக்க ஏலும் !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply