காதல் வெல்ல

காதல் எனும் மாயை –வந்து
கண்ணை மறைத்தாலும்–அட
சாதலைக் காட்டியேனும் –அதைச்
சாதிக்க நின்றாலும் –உயிர்ப்
பாதி என புகழ்ந்து –உடற்
பாடம் பயின்றாலும் –வரும்
மோதல் சில தினத்தில் –மோகம்
முப்பது நாள் ஆகும்!

ஆசை அடங்கும் வரை –வார்த்தை
ஆயிரம் பேசிநின்று –உயிர்ப்
பாசம் தனை மறந்து –உடற்
பசியை மட்டும் தணித்து –இளம்
வேகம் குறைந்த பின்பு –மன
வெறுப்பை நிதம் வளர்த்து –வெறும்
காசு நகைக்கிழிந்து –துயர்க்
காதல் தொலையுமின்று !

வாழ்வு மிகப் பெரிது –காதல்
வருங் காலம் சிறிது –சுக
வேளை முடிந்த பின்பு –சோறு
வேண்டுவாயா அலைந்து ?–இந்தத்
தாழ்வு நிலை களைந்து –வாழ்வின்
தளமொன்றை அமைத்து –மனக்
காழ்ப்பற்றுக் காதல் செய்து –வாழு
காமனின் அம்பை வென்று!

11.12.2019

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 4This post:
  • 82495Total reads:
  • 60636Total visitors:
  • 0Visitors currently online:
?>