செய் பிழை

காலம் கடத்தி ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தியே
ஆற்றப் படல் வேண்டும்!
காலம் கடத்தாது ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தாதே
ஆற்றப் படல் வேண்டும்!
காலம் கடத்தி எதைச் செய்ய
வேண்டுமென்றும்,
காலம் கடத்தாது எதைச் செய்ய
வேண்டுமென்றும்,
யார்தான் தெளிவாரோ….
அவர் உயர்வு கண்டுய்வார்!
நாம் இதனை நன்கு தெளியாத காரணத்தால்
காலம் கடத்தி ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தாது ஆற்றி;
அதுபோல
காலம் கடத்தாது ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தி ஆற்றி…
கடைநிலையில் கிடக்கின்றோம்!

19.04.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply