ஏன்
பொய்கள் உரைப்போரே அஞ்சாமற் போகையிலே
மெய்யை உரைக்க ஏன்
மெய், அஞ்சித் துஞ்சவேண்டும்?
பொய்யன் திமிரோடு புவியிற் திரிகையிலே
மெய்யன் ஏன் அஞ்சி அடங்கி
ஒடுங்கவேண்டும்?
பொய்கள் கடைசியிலே தோற்கும்
எனப்புரிந்தும்
பொய்யன் தலை உயர்த்தி
புவியில் நடக்கையிலே….
மெய் என்றோ ஓர்நாள் வெல்லும்
எனத்தெரிந்தும்
மெய்கள் தலைகவிழ்ந்தேன்
வீழ்ந்து தொழ வேண்டும்?
பொய்க்குத் துணைநிற்போர்
போர்க்குத் தயாராக
மெய்த்துணைவர் ஏன்தான்
போர் நிறுத்தம் செய்ய வேண்டும்?