தூண்டி
என் தனித்த வரண்ட வானின்
எல்லை தொடும் ஓர்பறவை…
என் மன வானத்தில்
எண்ணற்ற கவிப்பறவை
தன்னை உயிர்க்கவைத்து
தடை தாண்டிப் பறக்க விட்டு
என்பேரை எண்திக்கும் என்றும் அறிவித்து
என்புகழை அலகுகளில் ஏந்தி
மறைந்து போச்சு!
என்ன அதற்குக் கை மாறு
யான் செய்குவது?