நீளும் இடைவெளிகள்
இடைவெளி பெருகிடுது…
எதை எவர்தான் தீண்டினாலும்
தொடலாம் மரணம்….கை தூர விலகிடுது!
யார்மேல் யார் பட்டாலும்
தொற்று நீக்கி தெளித்து
பேதமின்றிக் கைகூப்பும் பெருமை
திரும்பிடுது!
கவசமிடும் முகங்கள்,
கண்ஜாடைப் பேச்சுக்கள்,
எவரையும் சட்டென்று இனங்காண முடியாத
நிலை,
இன்னும் நீண்ட காலம் தொடர்வதற்கு
வழிவகுத்த தொற்றதனால்;
அது எங்கள் வாழ்வோடு
கலந்து தொடருவதால்;
வாழும் மனம் கலங்கும்
இந்நிலையில்….நல்லிணக்கம்,
இடையறாத சுதந்திரம்,
அன்பால் இணைதல்,
அனைவரும் கூடிக் குலவல்,
நம்பிக்கை உறவு நட்பு , இவற்றின் எதிர்காலம்
என்னாகப் போகிறதோ
ஏக்கம் எழுகிறது!
என்னாகும் நாளை
எதார்த்தம் எதை நினைக்கிறது?