சொல் நன்றி

இத்தனைபேர் வாழ்த்தி நிற்க
என்ன தவம் புரிந்தேன்?
இத்தனை பேரின் நேசம்
பெற எதை யான் செய்துவிட்டேன்?
இத்தனை பேர் போற்றினரே…
எக் கைமாறு செய்வேன்?
இத்தனை நட்புக்கு
எதைச்செய்தென் கடனடைப்பேன்?

ஏதும் பிரதிபலன் பாராது
மெய் அன்பால்
வாழ்த்தி மகிழ்ந்தவரை
வணங்கிப் பணிந்தாலும்
அன்பொன்றைத் தவிர அள்ளிக் கொடுப்பதற்கு
ஒன்றுமிலா ஏழை எளியன்….
உயிரிருக்கும்
மட்டும் உமைமறவேன்!
வாழ்த்திய நல் உள்ளங்கள்
எட்டவேண்டும் உயரமெல்லாம்…
என் இறையை இறைஞ்சுகிறேன்!

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 1This post:
  • 103553Total reads:
  • 76092Total visitors:
  • 0Visitors currently online:
?>