எஸ். லம்போதரன்

தனபாலசிங்கம் தம்பதியினர் சமைத்த கவிதை ஜெயசீலன்!
கோட்பாடுகளால் தன்னை வனைந்து கொண்டு
ஓன்பதாண்டுகள் சென்று
யாத்த வரிகள் ‘எழுதாத ஒரு கவிதை!
நல்லூர்!
என் அன்னையர் பூமி
நானூற்று ஐம்பது
ஆண்டுகள் முன்பும்
நாம் விட்டு வந்த தலைப்பட்டிணம்!
கவிஞர் நல்லூரில் வாழக் கொடுத்துவைத்தவர்.
நல்லூரான் கிருபை வேண்டும் அவர்
என்றும் பெறுவார்
செல்லப்பன் யோகனை
ஈந்தவனின் இன்னருளை.
வாசலுக்கும் தனக்கும் இடையில் எவரையும் வைக்காது நேர்கொண்டு, நேர்க்கணியமாய் பயணிக்கும் கவிதைகள் இலங்கை நிர்வாகசேவை அதிகாரியான கவிஞர் தான் பயணித்த வளியில் எதிர்ப்பட்ட துன்பங்களை புலம்பாமல் கவிதைகள் ‘வெளிச்சம்’ கொண்டு வாழ்ந்து எழுதிய மனிதனாக நிறுவ முயலும் இந்த நல் மனிதர்கள். நான் அடிக்கடி பாவிக்கும் எந்த மனிதனும் பெற்றோரின் சரி, பிழைகளைக் கொண்டே பிறக்கின்றான். பகவத்கீதை, திருக்குறளிலிருந்து பிறக்கவில்லை. என்ற வரிகளை இக்கவிஞர் மனிதனாக வாழ்ந்து தகர்ப்பார் என்று நம்பிக்கையுடன் “கைகூட” விமர்சனத்தை நிறைகின்றேன்.

ஜெயம் தங்களிடமும்,……,
சீலன் என்னிடமும்……

எஸ். லம்போதரன்
கிராமசேவகர். பருத்தித்துறை