Author Archives: Webadmin

பொய்கள் தோற்கும்

பொய்களைக் கண்டு பயந்து – அதைப் புறஞ் சொல்லுவாரென் றதிர்ந்து. நைந்து மனங்கள் நலிந்து – ஊரில் நாலுபேரின் முன் குனிந்து செய்வதறியாதிருந்து – வாழ்தல் தீது; இதற்கு மருந்து

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கள் தோற்கும்

நீதி வெல்லும்.

காலமொன் றிருக்குது. கடவுள் தீர்ப் பிருக்குது. வாலையாட்டும் தீமைகள் மாய்ந்த மெய்யிருக்குது. போலி வேசம் பொய்மைகள் போர்க்கு நின்ற போதிலும்

Posted in கவிதைகள் | Comments Off on நீதி வெல்லும்.

தூயவை துணிந்துவிட்டால்

தூயவை செய்யத் துணிந்திடில்- இடர் துயர்கள் தொடர்ந்திட மாட்டுதே- அவை மாயும் அகலும் வழிவிடும் – என மா அறிஞர் முன்புரைத்தனர்- அது நூறு சதவீதம் உண்மையாம் – எண்ணி

Posted in கவிதைகள் | Comments Off on தூயவை துணிந்துவிட்டால்

பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

பொய்கட்கு ஆயுளோ அற்பம்- அதைப் பொருந்தாது சொல்லிடின் யார் ஏற்பர் நித்தம்? பொய்களை மெய்போலச் சொல்லும்- பொய்யர் புளுகையும் ஏற்காது புவிகேட் டொதுக்கும். பொய்யிதே என்று புரிந்தும் – அதைப் புன்னகையோடே கடத்தல் சிறப்பும்!

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

ஆற்றா அழுகை

வானம் அழுவதனை வழமையாக்கிற் றொவ்வொராண்டும்! “தோன்றும் வெளிப்பின்றோ” டென்று உரைத்தவாயே… நீளும் இது ‘பதினெட்டு’ வரை எனச் சொல்ல… வானம் அழுகிறது இன்றும்!

Posted in கவிதைகள் | Comments Off on ஆற்றா அழுகை

சிதைவுகள்

யுத்தம் குதற உயிரிழந்து சிதைந்தவைகள் சத்தியமும் மெய்யும் தருமமும் மட்டுமல்ல.., திசைகள் சிதைந்தன, திக்குகள் சிதைந்தன, அசையாத சொத்துக்கள் அசையும் சொத்தோடு ஊர்கள் சிதைந்தன,

Posted in கவிதைகள் | Comments Off on சிதைவுகள்

காக்க முயன்றால்…

கலையாத கனவோடு நனவின்று வாழும். கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம். விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம் விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும்.

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்…

கலியுகம்

நீதியும் நியாயமும் நீர்த்து நொடிந்திடும் நேரத்தில் வந்து பிறந்துவிட்டோம். நேர்மையாய் வாழ்ந்து நெருக்கடிகள் பட்டு நித்தம் துயரம் சுமந்திருப்போம். போதனை வேறு, நடைமுறை வேறெனும் பொய்மை உலகினில் தான் அலைவோம்.

Posted in கவிதைகள் | Comments Off on கலியுகம்

என்ன நடந்தது ஈற்றில்?

தீமை விளைப்போர், அதர்மம் அராஜகம் செய்வோர், அடாவடியாய் முயல்வோர், தீதென் றுணர்ந்தும் தம் ஆணவம் கன்மத்தால் ‘செய்து’…பலதில் ஜெயித்திடுவோர், ஊமைக்குத்தாய் மெய்யை வீழ்த்த முயன்றபின் உதவிக் கரம்கொடுத்தே அணைப்போர்,

Posted in கவிதைகள் | Comments Off on என்ன நடந்தது ஈற்றில்?

கோடைத் தகிப்பு

நீளும் திசையெல்லாம் நெருப்பெறியும் கோடையிலே, சூழுகிற காற்றினிலும் சூடு கிளம்பையிலே, வேகுகிற வெய்யிலிலே வீதி கொதிக்கையிலே, வேர்வை நதிகள் விரைந்து மேனி மேடுபள்ளத் தூடு பெருக்கெடுத்து

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

சர்வதேச மகளிர் தினப் பாடல், பச்சிலைப்பள்ளி.

Posted in Video | Comments Off on சர்வதேச மகளிர் தினப் பாடல், பச்சிலைப்பள்ளி.

ஈற்றில் என்ன ஆகும்?

மூண்டுஎழும் மோதல்களில் மூச்சிழந்து யாரெவர்…மண் மூடி, எரிந்தே, இறந்து போனார்?-யார் தாம் முக்கி உசிரூசலாட வாழ்ந்தார்?

Posted in கவிதைகள் | Comments Off on ஈற்றில் என்ன ஆகும்?

வெற்றிடம் தானோ விளையும்?

வானம் தொடும்படி மண்ணில் வளர் நகர் மாயும்; சுடுகாடாய் மாறும் – மக்கள் மறைவர்; இடுகாடு சூழும். -இந்த ஈனம் தொடர்ந்திடும்…ஏவு கணைகள் இன்றை வரலாற்றை மாற்றும் – இப்போ எமனுக்குத் தானே கொண் டாட்டம்!

Posted in கவிதைகள் | Comments Off on வெற்றிடம் தானோ விளையும்?

மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

பூமியைப் பொத்தல் போட்டன குண்டுகள். போய் ‘அடிமுடி’ தேடின வேட்டுகள். பாதாள லோகத் துள்ளே…பதுங்கிய பலரையும் தேடித் தின்றது ஏவு கணை. பாடு பட்டவர், பகலிர வாகத் தம் பணம் உழைப்பில் செழித்த பெருங்குடி,

Posted in கவிதைகள் | Comments Off on மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

நரகமாகும் நகர்கள்.

எங்கும் அழிவுகள். எங்கெங்கும் சிதைவுகள். எங்கும் புகைமூட்டம். எங்கெங்கும் தீப்பரவல். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப்… பொங்கி வெடித்துப் பொசுக்கிடுது போர்க்கணைகள்.

Posted in கவிதைகள் | Comments Off on நரகமாகும் நகர்கள்.