Author Archives: Webadmin

ஒருநாளதிகாரம்

ஐந்து வருடத்துக் கொருதரம் ஓர்நாள் மட்டும் வாக்கெடுப்பு நிலையம்தான் நீதிமன்றம்!அரசசேவையாளர்தான் நீதிமன்றப் பணியாளர்!கட்சிகள்தான் வாதாடும் வக்கீல்கள்!

Posted in கவிதைகள் | Leave a comment

ஒற்றுமை கொள்வமா?

மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழலாம்.மனமிருப்பின்…நாம் வெற்றியின் மாலைகள் எண்ணுக் கணக்கற்றெம் தோள் சேர்த்தும் ஆடலாம்.எண்ணம் போல நாம் வாகைகள் சூடலாம்.விண்ணின் சுவர்க்கத்தை வீதிக் கிறக்கலாம்.வெற்றி கொள்ளலாம்…நாமொன்றாய் நிற்கில்…நம் புண்ணை மாற்றலாம். பொலிவைப் பெருக்கலாம்.புன்னகை நிதம் பூத்தெழச் செய்யலாம்!

Posted in கவிதைகள் | Leave a comment

வலை

எச்சிலில் இருந்து இழைதிரித்து உறையவைத்து இச்சிறு சிலந்தி எழில்வலை பின்னுகிற வேகத்தைக் கண்டு வேர்த்துக்கொட்டிய தெனக்கு!யாரிதற்கிவ் ஆற்றலை அருளியது?

Posted in கவிதைகள் | Leave a comment

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!வானக் குடத்தால் வழிந்துஎண் திசையும்பாயும் அமுதம்போற் பரவும் நிலவின்ஒளி!நிலவு விளக் கொளிர,நின்ற இருள் கலைய,அலைபொங்கி ஆர்ப்பரிக்க,

Posted in கவிதைகள் | Leave a comment

தீபாவளி(லி)

ஆடும் வரைக்கும் பேயாட்டம் ஆடிவிட்டு, ஆடும் வரைக்கும் அறம் நியாயம் மறந்துவிட்டு,ஆடி…ஒருவன் அழிக்கவர அவனின்முன் தோற்றுவிடக் கூடாது என்று 

Posted in கவிதைகள் | Leave a comment

சுஜித்

மண்ணை அறியாது விண்ணை அறிவதற்கு எண்ணியது தவறென்று இருவயதுப் பாலகன் நீ இந்தப் புவிக்குயிரை விட்டுப் படிப்பித்தாய்! தாகத்தால் நா உலர்ந்து தவித்த ஆழ் துளைக்கிணற்றின் வாயில் துளிநீராய் வீழ்ந்து வற்றிப் போய்விட்டாய்!

Posted in கவிதைகள் | Leave a comment

தும்பிச் சூரன்!

ஈட்டி முனைக்கூரில் தன் ஒருகாற் பெருவிரலை ஊன்றிநின் றொருநூறு யுகங்கள் தவம் செய்து சாகா வரம் பெற்றுச் சகலரையும் ஆட்டுவித்த

Posted in கவிதைகள் | Leave a comment

கீழடி

தெய்வத் தமிழே! திசைதிக்கில் மூத்தவளே வையத் தினுக்கே வழிகாட்டி –உய்விக்கும் அன்னாய்…உனதுசேய்கள் ஆம்…உன் பெருமைகளைக் கண்டோமே கண்முன் களித்து!

Posted in கவிதைகள் | Leave a comment

யாமறிவோம்

எங்களுக்குத் தெரியும் எதைச் செய்ய வேணுமென்று!எங்களுக்குத் தெரியும் எதுசெய்தால் தவறென்று!உங்களது கட்டளையை,உங்களது வேண்டுகோளை ,உங்களது ஆதரவை,உங்கள் புறக்கணிப்பை,உங்கள் உடன்பாட்டை,

Posted in கவிதைகள் | Leave a comment

சொற்களை உயிர்ப்பித்தோன்

சடங்களெனக் கிடந்தன சொற்கள்தரையெங்கும்உடைந்து உதிர்ந்த கற்களென நொருங்கினவாம்!பழுத்து விழுந்து சிதையும் சருகுகளாய்அழுகி ஒழுகி அழியும் உடம்புகளாய்க்கிடந்தன சொற்கள்…

Posted in கவிதைகள் | Leave a comment

சுயம்

மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…உயிர் மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…உடல் மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…மரம் மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…இனம்

Posted in கவிதைகள் | Leave a comment

மதமதம்

மனிதர் களையும்  புனிதர் களையும்  தனித்துவ எல்லை தாண்டி  எரித்துப் புதைப்பதற்கு  மதம்பிடித்து அலைகிறது மதம்; அந்த மத மதத்தால்  புதைந்தும் எரிந்தும்  பொருளிழக்கும்  மனித இனம்!

Posted in கவிதைகள் | Leave a comment

நினைவுக் குரங்கு

நினைவுக் குரங்கு  நிமிடத்துக் கொருதரம்….தான்  நினைத்தபடி அங்குமிங்கும் நின்று  பாய்ந்து கொப்புமாறி  ஓரிடமும் கணமும் ஒதுங்காமல்  குதித்துப் பாய்கையிலே…..

Posted in கவிதைகள் | Leave a comment

எவ்வாறு புரியும் இவ் உலகு?

நேற்றிருந்தேன் மொட்டாய். இன்றுபூத்தேன் பூவாய். நாளை முகிழ்வேன்யான் காய்,கனியாய். அதன் பின்னே வீழ்வேன் கனியிருந்து வித்தாய். நேற்றிருந்து நாளைக்கும் அதன்பின்பும் எனை நகர்த்துமாம் காலம்! நான் நம்பு கின்றேன் யான்

Posted in கவிதைகள் | Leave a comment

பாவலனாம் காவலன்

கண்ணீரின் மழையிலே ககனங்கள் நனையவே கவிஞானி பா இசைத்தான். கற்பனை ஆழியில் அற்புதம் பலநூறு கவிமகன் மீட்டெடுத்தான்.

Posted in கவிதைகள் | Leave a comment