தீப வலி

ஓர் அசுரன்…
இந்த உலகை வதைத்தவன்…தன்
கோரச் செயலுணர்ந்து,
கொடுமைக்குத் தண்டனையாய்
ஊர்தனது சாவை
உளம்மகிழ்ந்து கொண்டாட
விரும்பினான்;
தீப விளக்கேற்றி ‘அச்ச இருள்
மறைந்ததினம் தனது மரணதினம்’
தனில்… உலகம்
மகிழ வரம் கேட்டழிந்தான்!
மக்கள் அதை மகிழ்வோடே
கொண்டாடி வருகின்றார்!
குளித்துப், புத்தாடைபூண்டு,
நண்பரன்பர் வீடுசென்று,
நல்ல உணவுண்டு,
களிக்க.. ஆயிரம் ஆயிரம் ஆடு, மாட்டின்
கழுத்தறுக்கக் கத்திவைக்கும்
கன்றாவி புரிகின்றார்
மரணத்தின் தூதுவராய் வாழும்
‘நர – அசுரர்கள்’!
ஒருஅசுரன் மாண்டநாளில்
ஒருநூறு அரக்கர்கள்
உருவாகும்… தீப ஒளிநாள் புலர்வது
அலறிக் கதறி அவலமாய்
வாழ்வைத் தொலைக்கும்
பலநூறு உயிர்களது பரிதாபச்
சா இருளில்…
கலிகால ‘நரகாசுர்’
இதற்கெல்லாம் கவலைகொள்ளார்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.