Category Archives: கவிதைகள்

அநாதை உலகு

அநாதையாச்சு வானம். அநாதையாச்சு முகில்கள். அநாதையாச்சு காற்று. அநாதையாச்சு வெய்யில். அநாதையாச்சு கதிரும். அநாதையாச்சு நிலவும். அநாதையாச்சு கடலும். அநாதையாச்சு கரையும். தனிமைப் படுத்தல் …சுய தனிமைப் படுத்தலென மனிதர்… சகமனிதர் உடன் தானும் சகஜமாக உரையாடக் கூட உதவாதோர் எனப் பழித்துக் கொரோனா சபிக்க;

Posted in கவிதைகள் | Leave a comment

அஞ்சுதல் அஞ்சாமை பேதமை!

ஏனின்னும் நாங்கள் எதிலும் அலட்சியமாய், ஏனின்னும் நாங்கள் எதிலும் அசட்டையாய், ஏனின்னும் நாங்கள் எதையும் புரியாது, ஏனின்னும் நாங்கள் எதற்கும் பயப்படாது, அஞ்சுதல் அஞ்சாமை பேதமை என் றறியாது, கெஞ்சி…’விளங்கியவர்’ கேட்க செவிகொடாது,

Posted in கவிதைகள் | Leave a comment

உலகு உணர்ந்ததெதை?

விண்ணிலும் மண்ணிலும் விரிந்த கடல்களிலும் நின்ற கபாட நெடுங் கதவம் எல்லாமும் ஒவ்வொன்றாய் மூடப் பட முகத்தைத் தத்தமது ஒவ்வொரு எல்லைகளின் உள்ளும் வளை எலிகள்

Posted in கவிதைகள் | Leave a comment

அவையா இவை?

எங்கே இதுவரை இருந்து திடீரென்று எங்கும் பரவி இறக்கவைத்த திக் கிருமி? இன்றா இது தோன்றிற்று? ‘என்றைக்கோ தோன்றி…ஓர் சின்னஞ் சிறுசீசாச் சிறைப்பட்டு அதுதிறக்கப்

Posted in கவிதைகள் | Leave a comment

என்றுமே தோன்றியிரா இடர், துயரம் !

தொட்டு ஸ்பரிசித்து சுகமளித்து தீட்சைதந்து முட்டறுத்து மோட்சம் அருளும் முறை கதை போய் தொட்டாலே…’மோட்சம்’ தொடும் அச்சம் சூழ்ந்து சற்று

Posted in கவிதைகள் | Leave a comment

உலகை உணர்!

தனித்திருத்தல் தவத்தின் முதற் படியில் ஒன்றாம்! தனித்திருத்தல் பெரும் யோகம்! ஞானம் காண தனித்திருத்தல் மார்க்கம்! இன்று தொற்று நோயில் “தப்ப இது ஒரே வழி” விஞ்ஞானம் ஏற்கும்! தனித்திருத்தல், தனிமைப் படுத்திடுதல், ஊரை சமூகத்தை, குடும்பத்தை, நாட்டை, வீட்டை, தனிப்படுத்தி உயிர் காப்போம். தேவை என்றால் தரணியையும் தனிப்படுத்தி உய்யப் பார்ப்போம்!

Posted in கவிதைகள் | Leave a comment

முகமூடி வாழ்வு

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பார் அகத்தினது ஐய அச்சம் முகத்தில் முகமூடி அணியவைத்த தின்று! ஆம் உயிர்க்கு ஊறுவரும் கணத்தில்…முகஅழகு

Posted in கவிதைகள் | Leave a comment

அச்சம் ஆளும் நாட்கள்

எப்படித்தான் இந்தத் துன்பம் எங்களையும் சூழ்ந்தது? ஏழு கடல் தாண்டி இன்றெம் ஊரும் தீப்பிடிக்குது. இப்ப எட்டுத் திக்கும் இந்த நோயில் வெந்து சாகுது, எம்மூர் வெப்பம் எம்மைக் காக்கும் என்றம்; ஏன் பிழைக்குது?

Posted in கவிதைகள் | Leave a comment

கலியின் கோலம்

சகுனிகளே அதிகமாக வாழும் காலம். தருமமொடு சத்தியத்தைத் தனியே நம்பி அகம் புறத்தில் தருமர்களாய் வாழ்ந்தால் மட்டும் ஆகாது; முள்ளை முள்ளாலே கொய்யும் வகையினிலே….புறத்தோற்றத் தருமர் கூட மனதினுள்ளே சகுனிகளாய் மாற வேண்டும்! மிகப்பெரிய வாழ்க்கைப்போர் நடக்கும் இந்த மேதினியின் தீயைத் தீயால் அணைக்க வேண்டும்!

Posted in கவிதைகள் | Leave a comment

காதல் வெல்ல

காதல் எனும் மாயை –வந்து கண்ணை மறைத்தாலும்–அட சாதலைக் காட்டியேனும் –அதைச் சாதிக்க நின்றாலும் –உயிர்ப் பாதி என புகழ்ந்து –உடற் பாடம் பயின்றாலும் –வரும் மோதல் சில தினத்தில் –மோகம் முப்பது நாள் ஆகும்!

Posted in கவிதைகள் | Leave a comment

இயற்கையோடு இணங்கு

காற்று பூக்களின் தேனைக் குடிக்குது. கடல் அலை தொடு வானைச் சுவைக்குது. ஊற்று நீர் மண்ணோ டூடிக் கலக்குது. ஒளி இருளினைத் தின்று செமிக்குது. சோற்றுக் காகவே சேற்றில் இறங்கையில் சொறி சிரங்கு வந்தாலும் கால் பூக்குது. தோற்று அழியாது பூமி…மனிதர் செய் துன்பம் பொறுத்தும் தொடர்ந்து அருளுது.

Posted in கவிதைகள் | Leave a comment

பழி

ஆழ்ந்து உறங்கும் கிராமத்தை அயல் வெள்ளம் பாய்ந்து அடித்துப் பலிவாங்கிச் செல்வதுபோல், சாவென்னும் பாம்பு கெளவியே இழுத்தோட

Posted in கவிதைகள் | Leave a comment

யதார்த்தம்

எத்தனை எத்தனை தத்துவம் கண்டனர்! எத்தனை சத்திய வேதம் பயின்றனர்! எத்தனை நீதிநூல் கற்றுத் தெளிந்தனர்? எத்தனை மார்க்க உபதேசம் பெற்றனர்? முத்தி வழி, வகை, மூலம், உணர்ந்தனர். மூத்த பலர் சொல் அனுபவம் தேர்ந்தனர்.

Posted in கவிதைகள் | Leave a comment

சு’தந்திரம்’

உப்பிட்டவர் களை உள்ளளவும் நினைக்கத் துப்பற்றுக் கடைகளிலே தொங்கிடுது கருவாடு! உப்பிடுதல் உயிர்க்கு …வாழ்வு; உடல் அழுகா திருப்பதற்கு உப்பிடுதல் வேறு;

Posted in கவிதைகள் | Leave a comment

உறவு

மரம் நிமிர்ந்தே நிற்கிறது. வந்து வந்து பலநூறு பறவைகள் அமர்கிறது. பறந்து பல திரும்பிடுது. மரத்துக்குக் கவலையில்லை. வந்துபோகும் பறவைகளால்

Posted in கவிதைகள் | Leave a comment